பக்கம் எண் :

691நோக்கு

முதற் காரணம்

    “தொல்காப்பியத்திற்கும் சங்கப்பனுவல்கட்கும் உரையாசிரியர்கள்
பெரும்பாலும் பிற்கால நூல்களிலிருந்து மேற்கோள்கள் தருவதில்லை.
பழந்தமிழ் நூல்களை அவற்றிற்குரிய பெருமையோடு பரப்ப விரும்பினார்கள்
உரையாசிரியர்கள் என்ற நெறியை இதனால் அறிகின்றோம்”1.

இரண்டாவது காரணம்

    பழைய இலக்கியங்கள் மரபு பிறழாதவை என்ற எண்ணம்
உரையாசிரியர்களிடம் இருந்தது. பிற்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில்
பழைய மரபு காணப்படவில்லை. எனவே பழந்தமிழ் இலக்கண
இலக்கியங்களுக்கு உரை கண்டவர்கள் அவற்றிற்கு ஏற்ற, அவற்றோடு ஒத்த
பழைய நூல்களிலிருந்தே மேற்கோள் காட்ட வேண்டியதாயிற்று.

மூன்றாவது காரணம்

    “பொதுமக்கள் இலக்கியம் என்பது தமிழில் தொடர்ந்து
விளங்கிக்கொண்டே வந்துள்ளது. ஆனால், கற்றோரது இலக்கியமென ஒருசில
எழுந்து பொதுமக்கட்கும் கற்றோர்க்கும் இடையே ஒரு பெரிய பிளவினை
ஏற்படுத்தியது”2 பொதுமக்களின் பாராட்டுதலைப் பெற்ற புதுவகை இலக்கியம்
கற்றறிந்தவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால்
உரையாசிரியர்கள் பிற்காலத்தில் எழுந்த பொது மக்களால் பாராட்டப்பெற்ற
பல புதுவகை இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டவில்லை.

நான்காவது காரணம்

    சமய வேறுபாடு காரணமாய்ச் சில நூல்கள், மேற்கோள்காட்டப்
பெறாமல் புறக்கணிக்கப்பட்டன. தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாடல்கள்
ஆகியவை தோன்றியபோது, அவற்றை மக்கள் மிக ஆர்வத்தோடு கேட்ட
காலத்தில் பல சமண பௌத்த சமயப் புலவர்கள் இருந்தனர். அவர்கள்
தம்தம் சமயச் சார்பான நூல்களிலிருந்தே மேற்கோள் காட்டினார்.
யாப்பருங்கல விருத்திவுரை, காரிகை உரை, நேமிநாதவுரை, வீரசோழிய
உரை, நன்னூல் மயிலை நாதர் உரை ஆகியவை நாயன்மார், ஆழ்வார்
ஆகியவர்களின் காலத்திற்குப்பின் தோன்றியவை என்பதையும்; அவர்கள்
பாடல்களை இவ்வுரை


 1. எந்தச் சிலம்பு (1964) பக்கம் - 76.

 2. கலைக் களஞ்சியம் 5 (பக்கம் 492) தெ. பொ. மீ.