பக்கம் எண் :

695நோக்கு

பற்றுடையவராய், சிவவழிபாட்டில் விஞ்சிநின்றமை அனைவரும் அறிந்ததே.
இதனால், கம்பனது இராமாவதாரம் அரசவைப் புலவர்களால் விரும்பி
வரவேற்கப்படாதிருந்திருக்கலாம். மேலும் கம்பனது காவியப் போக்கைப்
பழைய நெறியையே போற்றும் புலவர்கள் விரைந்து ஏற்றுக் கோடலும்
இயலாததே. உரையாசிரியர்கள் கம்பனை மேற்கோளாக எடுத்தாளாமையும்
ஆழ்ந்து சிந்தித்தற்கு உரியது. பிற்காலத்தில் சமய உணர்ச்சியாலும் சிலர்
கம்பனைப் புறக்கணித்திருத்தல் கூடும்”. 1

     விரல்விட்டு எண்ணக்கூடிய இடங்களில் உரையாசிரியர்கள் கம்பரை
நினைவூட்டிச் சென்றுள்ளனர். ‘கம்பனாரிடைப் பெருமை உளது’ என்று
வீரசோழியவுரை உதாரணம் கூறுகின்றது (வேற் - 7). பரிமேலழகர்
பேராண்மை என்பதற்கு, “இலங்கையர் வேந்தன் போரிடைத் தன்தானை
முழுதும்படத் தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியர்
இறை மேற்செல்லாது, ‘இன்று போய் நாளை நின் தானையோடு வா’ என
விட்டாற்போல்வது” என்று இராமயணத்தை நினைவூட்டு கின்றார் (773).
பெரியவாச்சான் பிள்ளை ‘ஈக்கள் வண்டொடு’ (கம்ப நாட்டுப் படலம்) என்ற
பாடலை மேற்கோள் காட்டுகின்றார்.

     சைவ உரையாசிரியர்கள் கம்பரைப் புறக்கணித்தனர் என்றால், வைணவ
உரையாசிரியர்கள் போற்றாதிருக்கக் காரணம் யாது என்பது விளங்கவில்லை.

     பெரியபுராணமும் உரையாசிரியர்களால் மேற்கோளாக ஆளப்
பெறவில்லை. பெரியபுராணச் செய்யுள்களைச் சைவ உரையாசிரியர்களும்
மேற்கோள் காட்டமைக்குரிய காரணம் புலப்படவில்லை. திருக்கோவையாருக்கு
உரைகண்ட பேராசிரியர் (கோவை - 312) திருக்குறள் உரையாசிரியராகிய
பரிமேலழகர் (குறள் - 442) ஆகியோர், மன்னனுக்க உரிய கடமைகளைக்
கூறும் சேக்கிழார் கருத்தைத் தம் உரையில் உரைநடைப்படுத்தி
எழுதுகின்றனர். 2

     கோவை, பரணி முதலிய சிற்றிலக்கியங்களில் மிகச்சில நூல்களிலிருந்து
மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. இறையனார்


 1. கம்ப. பால காண்டம் (மர்ரே அண்டு கம்பெனி வெளியீடு) பதிப்புரை
   (பக்கம்-5).

 2. “மாநிலங்கா வலன்ஆவான் மன்னுயிர்காக் கும்காலை,
     தான்அதனுக் கிடையூறு, தன்னால்தன் பரிசனத்தால்
     ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
     ஆனபயம் ஐந்தும்தீர்த்து அறங்காப்பான் அல்லனோ”

                                      - பெரிய. திருநகரச் - 36.