மொழி; இத்தாலியம் காதல் மொழி என்று கூறுகின்ற வழக்கை நினைவுபடுத்தித் தமிழைப் பக்தி மொழி என்பர்.* சைனரும் பௌத்தரும், சைவரும் வைணவரும், மூஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் ஒன்றுபட்டு இலக்கிய உரிமை கொண்டாடும் ஒரு மொழி உண்டு என்றால் அது தமிழியாகும். பலவேறு சமயங்களின் தமிழ்த் தொண்டு, இந்நாட்டு மக்களின் ஒப்பற்ற பெருந்தன்மைக்குச் சான்றாய் விளங்குகின்றது. சமய வேறுபாடுகளை மறந்து - சமயக் கோட்பாடுகளை மறந்து - கருத்து முரண்பாடுகளை மறந்து அனைவரும் மொழியால் ஒன்றுபடுகின்றனர். தமிழ்த் தொண்டால் அனைவரும் தமிழ் இனத்தினர் என்றும், தமிழ் நாட்டவர் என்றும் கருதி வாழ்கின்ற ஒருமைப்பாட்டு உணர்வு பல நூறு ஆண்டுகளாய் வளர்ந்து வருகின்றது. இராமலிங்க அடிகளார் சமய உலகில் கண்ட ஒருமைப்பாடு தமிழினத்தை ஒன்றுபடுத்தி வருகின்றது. தமிழகத்தில் தோன்றி வளர்ந்த எல்லாச் சமயங்களும் போட்டியிட்டுக் கொண்டு, உரைநூல்கள் இயற்றியுள்ளன. சமயம் சார்ந்த இலக்கியம் இலக்கணம் சாத்திரம் தோத்திரம் ஆகிய எல்லா உரைநூல்களும் ஆற்றிய பணிகளைப் பின்வருமாறு பாகுபடுத்தலாம். 1. சமயக்கொள்கைகளை மிகத் தெளிவாய் விளக்கி, தமிழில் தத்துவச் சிந்தனை வளத்தை உண்டாக்கியுள்ளன. 2. தமிழகத்துச் சமயங்களில் வரலாற்றை விளக்குகின்ற காலக் கண்ணாடியாய் உள்ளன. 3. சமய சிந்தனையை, தத்துவமுறைப்படி செம்மையாய் விளக்கத் தருக்க நூற்புலமை தேவைப்படுவதால், தருக்க நூற்கொள்கைகள், மிகத் தெளிவாக விளக்கப்படுகின்றன. பலவேறு உரைநூல்களில் கூறப்பட்டுள்ள அளவைநூல் கருத்துக்களைத் தொகுத்தால் மிகச் சிறந்த அளவைநூல் ஒன்றைத் தமிழில் உருவாக்கலாம். 4. சமயம் சார்ந்த கலை பண்பாடு நாகரிகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள உரைநூல்கள் பெரிதும் துணை செய்கின்றன. 5. பதிப்பாசிரியர்கள் இன்று நம் கையில் உள்ள உரைநூல்கள் கண்ணைக் கவரும் வனப்புமிக்க அட்டைகளுடன், முத்து முத்தான அச்சு * தமிழ்த் தூது (1962) பக். 34, தனிநாயக அடிகள். |