பக்கம் எண் :

713நோக்கு

தந்தார். பாட்டு உரை விளக்கம் என்ற முறை மாறி, தொடக்கத்தில்
விளக்கமும், பின் ஏனைய பகுதியும் இருந்ததை ஒழுங்குபடுத்தினார். 1

     பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அமைந்துள்ள
பதிகத்தை, தொடக்கத்தில் அமைத்து உரை எழுதியிருப்பதும் இங்கே
நினைக்கத் தக்கதாகும்.

     நற்றிணை, குறுந்தொகை ஆகிய இரு தொகை நூல்களின் ஏட்டுப்
பிரதிகளில் பாடலுக்குத் திணை  குறிப்பிடப்படவில்லை. அவற்றை முதன்
முதலில் பதிப்பித்த  பின்னத்தூர் அ.நாராயணசாமி அய்யரும்,
திருக்கண்ணபுரத்துச் சௌரிப் பெருமாள் அரங்கனாரும் பாடல்களுக்கு
ஏற்றவாறு தம் ஆராய்ச்சிக்கு உடன்பாடான முறையில் திணை வகுத்தனர். 2

தமிழகத்தில் அச்சுக்கலையின் வரலாறு

    இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழ்மொழிக்குத்தான் அச்சு
எழுத்துக்கள் தோன்றின.

முதன்முதலில் அச்சான புத்தகம், தமிழ்ப் புத்தகம்தான். தமிழ் அச்சு
எழுத்துக்களை 1956 ஆண்டு (1577) கொல்லத்தில் உண்டாக்கினர். 1578
ஆம் ஆண்டில் Doctrina Christam என்ற பெயருடன் தமிழ் நூல் ஒன்று
வெளியாயிற்று (அச்சுக்கலை மா.சு. சம்பந்தன் (1960) பக்கம் 144-6) தனிநாயக
அடிகள், தமிழ்த்தூது என்ற நூலில் (பக். 123, 124), ‘தமிழ் மொழிதான்
இந்திய மொழியில் முதன்முதலில் அச்சினைக் கண்டமொழி. 1554-ல்
இலிஸ்பன் மாநகரில் இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டு தமிழ்ச்
செபங்களை ஒலி பெயர்த்த நூல் ஒன்றினை அச்சிட்டனர்’ என்று
கூறுகின்றார்.

     தொடக்கத்தில் வெளியான தமிழ் நூல்கள் யாவும் கிறித்துவ சமயத்தைப்
பரப்பும் சின்னஞ்சிறு வெளியீடுகளே ஆகும். அச்சுக்கலை தமிழகத்தில்
16-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தோன்றிவிட்டபோதும், அச்சிடும்
உரிமை இங்குள்ள மக்களுக்கு வழங்கப்படவில்லை. அச்சுயந்திரங்கள்
வாங்குதல், அச்சு எழுத்துக்களை உண்டாக்குதல், நூல்களை அச்சிட்டுப்
பரப்புதல் போன்ற உரிமைகள் போன்ற அயல் நாட்டினரிடமே இருந்தன.
இதனால் ஏட்டில் எழுதி வைக்கப்பட்ட பழந்தமிழ் நூல்கள் அச்சேற
முடியவில்லை.

     கி.பி. 1835-ஆம் ஆண்டில் உள்நாட்டு மக்கள் அச்சிடும் உரிமை
பெற்றனர். அந்த ஆண்டு முதல், தமிழகமெங்கும் அச்சுயந்திரங்கள் பரவின;
பழந்தமிழ் நூல்கள் அச்சேறின.


1. தமிழோசை (1955) டாக்டர் அ.சிதம்பரநாதனார், பக்கம் 129.

2. குறுந்தொகைச் சொற்பொழிவுகள் (1940) பக்கம். 6.