அச்சு எழுத்துக்களை அக்காலத் தமிழ்ப்புலவர்கள் “எழுதா எழுத்து” என்றனர். * கி.பி. 1835-ஆம் ஆண்டிற்கு முன்னரே, ஆங்கிலேயர்கள் தமிழ் கற்க ஏற்படுத்திய சென்னைக் கல்விச் சங்கத்தின் (1812-1854) சார்பில் மிகச் சில பழந்தமிழ் நூல்கள், பாடநூலாக அச்சங்கத்தின் சார்பில் பதிக்கப்பட்டன. பதிப்பாசிரியர்கள் “நூலாசிரியர், உரையாசிரியர், விரிவுரையாசிரியர் ஆகியோர்க்குள்ள மதிப்பு, பதிப்பாசிரியருக்கும் அளித்தல் வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளக் கூடிய தொன்றே. அம் மூவருக்கும் உள்ள அறிவு பதிப்பாசிரியருக்கும் இன்றியமையாதது” (தமிழோசை - டாக்டர் அ. சிதம்பரநாதனார், (1955) பக்கம் 126) பதிப்பாசியர்களை நினைக்கும்போது எளிதில் தம் நினைவுக்கு வருபவர் மூவர். தமிழ்ப் பெரியார் திரு.வி.க. “பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர்” என்று கூறுகின்றார். இம் மூவரும் பதிப்புக்கலையை வளர்த்த கலைஞர்கள். இம் மூவரிடமும் ஒவ்வொரு தனித்தன்மை காணப்படுகின்றது. ஆறுமுகநாவலர் தாம் பதிப்பித்த நூல்களில் பாட வேறுபாடுகளைத் தருவதில்லை. தமக்குச் சிறந்தது என்று தோன்றிய பாடத்தை மேற்கொண்டு ஏனையவற்றை நீக்கி விட்டார். தம் பதிப்பில் மிகச் சிறிய பிழையும் நேர்ந்து விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாய் இருந்தார். ‘நாவலர் பதிப்பு, நல்ல பதிப்பு’ என்று மக்கள் போற்றினர். தேவையான இடங்களில் மிகச் சிறிய விளக்கங்களை அடிக் குறிப்பாகத் தந்தார். இவரது பதிப்பில், நூலைப் பற்றிய வரலாறு, ஆசிரியர் பற்றிய விளக்கம், ஏடுகளின் நிலை, ஆராய்ச்சி முன்னுரை எதுவும் காண முடியாது. சி.வை. தாமோதரம் பிள்ளை, மூல ஏடுகளில் இருந்த அமைப்பு முறையைத் தேவையான இடங்களில் மாற்றினார். அரிய பெரிய முன்னுரைகளை இயற்றினார். பதிப்பிப்பதில் உள்ள இடர்ப்பாடுகளையும் ஏடுகளின் நிலையையும் விரிவாகக் * பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் - 106. |