உரைநூல்களை வெளியிட்ட பதிப்பாசிரியர் பட்டியல் கீழே உள்ளது. பதிப்பாசிரியர் பட்டியல் * பதிப்பாசிரியர் | உரைநூல் | இடம் | ஆண்டு | இராமாநுச கவிராயர் சரவணப் பெருமாள் ஐயர் கந்தசாமிஐயர் மயிலை சண்முகம் பிள்ளை கோவிந்தபிள்ளை தி.ஈ.ஸ்ரீநிவாச ராகவாச்சாரியார் சுப்பராய செட்டியார் வாசுதேவ முதலியார் சிதம்பர கவி | திருக்குறள்பரிமேலழகர் - உரை வாக்குண்டாம்,நல்வழி - உரை நைடதம் -உரை தஞ்சைவாணன் கோவை சொக்கப்பநாவலர் உரை வில்லிபாரதம்(சபா பர்வம்) உரை நளவெண்பாஉரை - சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம் பதிப்பாசிரியர் உரை சிலப்பதிகாரம் பழமொழி நானூறு பதிப்பாசிரியர் உரை நான்மணிக்கடிகை கோ. இராசகோபால பிள்ளை உரை கூர்ம புராணம்உரை | சென்னை -- -- சென்னை -- சென்னை சென்னை -- -- | 1840 1859 1842 1843 1868 1870 1876 1872 1874 1879 1883 |
இருபதாம் நூற்றாண்டில் பதிப்பாசிரியர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்துப் புகழ்பெற்ற பதிப்பாசிரியர்கள் பலர் உள்ளனர். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் (1855-1942) இக்காலப் பகுதியைச் சேர்ந்தவரே. பதிப்புக்கலையில் எண்ணிறந்த அறிஞர்கள் ஈடுபட்டுப் பணியாற்றியுள்ளனர்; அவர்கள் அனைவரையும் குறிப்பிட்டு அவர்கள் செய்த தமிழ்ப் பணிபற்றித் தனியாக ஒரு நூலை இயற்றலாம்.
* 19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் - பக்கம் 379-891 மயிலை சீனி. வேங்கடசாமி. |