பக்கம் எண் :

721நோக்கு

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1862-1914)

    பழந்தமிழ் நூல்களில் ஆழ்ந்த புலமையுடைய இவர் தஞ்சை
மாவட்டத்தினர். நற்றிணைக்கு உரை எழுதிப் பதிப்பித்த பெருமைக்கு
உரியவர் இவர்.

இ.வை. அனந்தராமையர் (1872-1931)

    ஆராய்ச்சித்திறன் மிகுந்த தமிழ்ப்புலமையார் இவர். தஞ்சை மாவட்டம்
இடையாற்று மங்கலம் என்னும் ஊரினர். கலித்தொகை - நச்சினார்க்கினியர்
உரையைப் பலவகை அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் வெளியிட்டுப் புகழ்
பெற்றவர்.

கரந்தைச் கவியரசு ரா. வேங்கடாசலம்பிள்ளை (1858 - 1953)

    முறையாகத் தமிழ்பயின்ற இவர், பல ஆண்டுகள் ஆசிரியராகப்
பணியாற்றியவர். தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச் சிலையார் உரை
பதிப்பித்தவர்.

ச. பாவானந்தம் பிள்ளை (? - 1932)

    இவர் தமிழும் ஆங்கிலமும் கற்ற அறிஞர். இவர் தம் பெயரால்
கல்விக்கழகம் ஒன்றைப் பெரும் பொருட்செலவில் நிறுவினார்.
நாற்பதாண்டுகள் அரிதில் முயன்று பழந்தமிழ் நூல்களைத் திரட்டி
தொகுத்தார். பல உரை நூல்களை அச்சிட்டார். தொல்காப்பியம்
பொருளதிகாரம் (நச்சினார்க்கினியர் உரை, பேராசிரியர் உரையுடன்)
யாப்பருங்கல விருத்தியுரை, இறையனார் அகப்பொருள் உரை,
வீரசோழியவுரை ஆகியவை இவர் பதிப்பித்த உரை நூல்களாகும்.

தெ. பொ. பழனியப்ப பிள்ளை

    தமிழும் ஆங்கிலமும் வல்ல ஆராய்ச்சி அறிஞர் திருவேங்கடவன்
கீழைத்துறை ஆராய்ச்சிப் பகுதியில் பணியாற்றிய இவர், அங்கே இருந்த
பழைய ஓலைச் சுவடிகளில் காணப்பட்ட திருக்குறள் - காலிங்கர்,
பரிப்பெருமாள் உரையை வெளியிட்டார்.

ச. தண்டபாணி தேசிகர்

    சைவமும் தமிழும் தழைத்தோங்கப் பெருந்தொண்டு புரிந்த
ஆராய்ச்சியாளர் இவர். நன்னூல் - சிவஞான முனிவர் விருத்தியுரையைத்
திருத்தமுற வெளியிட்டுள்ளார். அப்பதிப்பில், காலப் பழமையால் நூலில்
ஏறிய பிழை, அறியாமையால் திருத்திவிட்ட பாடபேதம், விளக்கமற்றிருந்த
பகுதி ஆகியவற்றை