பக்கம் எண் :

723நோக்கு

6. திருத்த வேண்டிய உரைப் பகுதிகள் 

     இலக்கணக் கொத்தின் ஆசிரியர்,

    நூல்,உரை, போதகா சிரியர் மூவரும்
    முக்குண வசத்தான் முறைமறைந் தறைவரே

என்று கூறியுள்ளார். இம்மூவரோடு பதிப்பாசிரியர்களையும் நாம்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.

     “ஏடு எழுதுபவர், அச்சு எழுத்துக்களைக் கோப்பவர், பதிப்பிப்பவர்
ஆகிய எல்லோரும் எல்லாம் தெரிந்தவராய் இருத்தல் இயலாது ஆதலின்,
அவருள் யாரையும் குறை கூறாமலும் நம்பாமலும் ஒவ்வொருவரும் உண்மை
காண முயல வேண்டும்” என்று தமிழறிஞர் மு. அருணாசலம் பிள்ளை
கூறியிருப்பது போற்றத்தக்கதாகும். 1

     பழைய நூல்களைப் பதிப்பிக்கும் வாய்ப்புப் பெறாத கற்றறிந்த
அறிஞர்கள் அச்சு நூல்களில் ஆங்காங்கே கூறி வந்துள்ள திருத்தங்கள்
பலவாகும். அவர்கள் தம் மாணாக்கர்களுக்குப் பாடம் சொன்னபோது
அச்சுநூல்களில் இருந்த பிழைகளை எடுத்துக்காட்டி, பொருத்தமான
பாடங்களை விளக்கியுள்ளனர். தமிழ்ச் சான்றோர் சிலர் தாம் பலகாலும்
பயின்ற நூல்களில் தமக்குச் சரி என்று தோன்றிய பல திருத்தங்களைக்
குறித்து வைத்ததும் உண்டு; சிலவற்றை எழுதி வெளிப்படுத்தியதும் உண்டு.
பழைய நூல்களை மறுமுறை புதிதாக, பதிப்பிக்க முன் வருவோர் இத்தகைய
நல்ல திருத்தங்களை அறிந்து போற்றி மேற்கொள்ள வேண்டும்.

    புதியன கண்ட போது
    விடுவரோ புதுமை காண்பார்

என்று உலகம் மதிக்கும்வகையில், புதிய பதிப்பாசிரியர்கள் விளங்க
வேண்டும். இன்றேல், அறிஞர் பெருமக்கள் கண்டறிந்த பல நல்ல
திருத்தங்கள், கடலில் கரைத்த பெருங்காயமாய்ப் போய்விடும்.

     பிரயோகவிவேக நூலார், “இளம்பூரணரும் போலி எழுத்தைக்
கொள்ளற்க என்று கூறாமை அவர் உரையிற் காண்க” என்று எழுதியுள்ளார்
(பிரயோக காரக படலம் -5). ஆனால், இன்று வெளியாகியுள்ள அச்சு
நூல்களில் இளம்பூரணர் உரையில் போலி எழுத்தைப் பற்றிக் குறிப்பிடும்
இடத்தில் ‘கொள்ளற்க’ என்று (நச்சினார்க்கினியர் உரைப் பகுதியில்
உள்ளவாறே) எழுதப்


 1. 1008 ஆவது நூல் வெளியீட்டு விழா மலர் கழக வெளியீடு (1961)