பக்கம் எண் :

உரையாசிரியர்கள்734

கூட்ட இறைந்தாவாறு கண்டு கொள்க” என்று கூறுவர். இவ்வாறே
இப்பாடலை நன்னூல் உரையாசிரியர்கள் மொழிமாற்றுப் பொருள் கோளுக்கும்
(நன்-413), யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர், சுண்ணமொழி மாற்றுப்
பொருள்கோளுக்கும் உதாரணம் தந்து, சொற்களை மாற்றி இயைத்துக்
காட்டுவர்.

     இவ்வாறு சொற்களை மாற்றி இயைத்துப் பொருள் கொள்ளும்போது,
பாடல் பொருள் சிறப்பு இன்றி நிற்கிறது. ‘காக்கை கறுப்பு, கடல் தண்ணீர்
உப்பு’ என்று விளையாட்டாகச் சொல்வது போல, “கானக நாடனின்
சுனையில் சுரை மிதக்கிறது. அம்மி ஆழ்கிறது, யானை நிற்கிறது, முயல்
மூழ்குகிறது” என்று பொருள் கொள்வதில் என்ன சிறப்பு இருக்கிறது?

     எனவே, இப்பாடலைச் சுண்ணப் பொருள்கோள் முதலியவற்றிற்கு
வழிவழியாய் உதாரணமாகக் காட்டி வருவது பொருந்தாது.

3

     தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில் உள்ள உரியியலில் இரு சீரான்
அமைந்த (குறள் அடி.) சூத்திரங்கள் பல உள்ளன. ஏனைய இயல்களில்
இத்தகைய சூத்திரங்கள் இல்லை. இரு சீரான் அமைந்த இச் சூத்திரங்கள்,
அடுத்து அடுத்து இடம் பெற்றுள்ளன. இவை நான்குசீர் கொண்ட
சூத்திரங்களாக அமைக்கும் வகையில், எதுகை மோனை ஓசைநயம்
ஆகியவற்றால் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. இவற்றை எல்லாம் உற்று
நோக்கிய மு. அருணாசலம்பிள்ளை தொல்காப்பியர் நான்கு அடி கொண்ட
சூத்திரங்களாகவே - ஏனைய இயல்களில் செய்திருப்பது போலவே இயற்றி
இருக்கவேண்டும். ஒரு சூத்திரம் ஒரு பொருளையே உரைக்க வேண்டும்
என்ற வடமொழியாளர் கருத்து, தமிழ் இலக்கண உலகில் செல்வாக்குப்
பெற்ற காலத்தில் உரியியல் சூத்திரங்கள் இவ்வாறு பிரிக்கப்பட்டிருக்க
வேண்டும். இம்மாறுதல் எக்காலத்தில் நிகழ்ந்தது என்று கூறத் தக்க
சான்றுகள் கிடைக்கவில்லை” என்று வகுப்பில் விளக்கினார்கள். உரியியல்
சூத்திரங்கள் சிலவற்றை அவர்கள் இயைத்தும் காட்டினார்கள். அவர்கள்
கூறியவண்ணம்,

    பயப்பே பயனாம்                 (உரியியல் -9)
    பசப்பு நிறனாகும்                 (உரியியல் -10)
    இயைபே புணர்ச்சி                (உரியியல் -11)
    இசைப்பு இசையாகும்              (உரியியல் - 12)

என்பனவற்றை,