4 உவமை குறுகி உருவகமாகின்றது; உருவகம் குறுகி ஒரு பொருள் (ஏகதேச) உருவகம் ஆகின்றது; அதுவும் குறுகி, குறிப்பு உருவகம் ஆகின்றது. பரிமேலழகர், ‘இடுக்கண் கால் கொன்றிட’ என்றும் குறளில் குறிப்பு உருவகம் இருப்பதாய்க் கூறுகின்றார். பரிமேலழகர் தரும் விளக்கத்தைக் கொண்டு நோக்கும்போது, பின்வரும் அகநானூற்றுப் பாடல்களின் அடிகளில் குறிப்பு உருவகம் இருப்பது புலனாகின்றது. பயம்பமல் அறுகை தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணு மணியன்ன மாயிதழ்ப் பாவை - அகம் : 136 தண்கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை வைவாய் வான்முகை - அகம் : 144 பதிற்றுப்பத்துப் பதிகத்தில் (2) வருகின்ற ‘உதியஞ்சேரற்கு வெளியன் வேண்மான் நல்லினி ஈன்ற மகன்’ என்ற தொடரை நினைவில் கொண்டு, மேலே உள்ள பாடல்களின் அடியை நோக்குவோம். ‘அறுகம்புல், மழைக்கு ஈன்ற கிழங்கு’ (அகம் - 136) என்றும்; முல்லைக் கொடி மழைக்கு ஈன்ற அரும்பு (அகம் - 144) என்றும் சங்கப் புலவர்கள் கற்பனைச் சிறப்புடன் குறிப்பு உருவகம் அமைத்துப் பாடியுள்ளனர். அவற்றில், அறுகம்புல் - தாய் மழை - தந்தை கிழங்கு - குழந்தை என்றும், முல்லைக்கொடி - தாய் மழை - தந்தை அரும்பு - குழந்தை என்றும் பொருள் அமைகின்றன. இவ்வாறே அகநானூற்றில் (212) வரும், ‘நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற முளை’ என்னும் அடியில், நாணற் கிழங்கு - தாய் மணல் - தந்தை |