பக்கம் எண் :

743நோக்கு

ஒத்துச் செல்வதால், அவர் அவ்வாறு செய்தது பொருந்தும். இவரைப்
பின்பற்றி மணக்குடவர் உரையில், கிடைக்காத பகுதிகளைப் பரிப்பெருமாள்
உரையைத் தந்து அதனைக் குறிப்பிடலாம்.

9. உரையில்லாத நூல்கள்

     உரை வளம் கொண்ட நூல்கள் பல உண்டு. கருத்து வளர்ச்சிக்கு
ஏற்றவாறு பழைய நூல் ஒன்றிற்கே பலப்பல புதிய உரைகள் தோன்றியுள்ளன.
தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார், நன்னூல், திருவாய்மொழி,
திருவாசகம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், கம்பராமாயணம் ஆகிய
நூல்கள் உரைவளம் உடையவை.

     ஓர் உரையும் இல்லாத வறுமை, பல நூல்களுக்கு உள்ளது. பழைய
நூல்களை உரையின் உதவியின்றிப் படித்துணர எல்லோராலும் இயலாது.
உரையில்லாத நூல்களைப் பாடமாக வைக்கும்போது, மாணவர்கள் அவற்றை
நன்கு படித்துணர இயலாமல் துன்புறுகின்றனர். உரையில்லாத நூல்கள்.
மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்ட சித்திரவண்ணப் பட்டாடை போல -
இருள் அடர்ந்த இடத்தில் உள்ள எழிலோவியம் போலப் பிறர் நுகர
இயலாமல் முடங்கிக் கிடக்கின்றன.

     உரையில்லாத நூல்களை இங்கே காண்போம்.

     சைவத் திருமுறைகள் பலவற்றிற்குத் தக்க உரைகள் இன்னும்
தோன்றவில்லை. பொதுமக்களும் மாணவர்களும் படித்து இன்புறத்தக்கவாறு
பல எளிய உரைகள் தோன்றி, திருமுறைகள் வெளிவருதல் வேண்டும்.

     இடைக்காலத்தில் மிகுதியாகத் தோன்றிய புராணங்களுக்கும் கோவை,
உலா, தூது முதலிய சிற்றிலக்கியங்களுக்கும் உரைகள் எழுதி
வெளியிடவேண்டும். பண்டார சாத்திரங்கள் பதினான்கும் உரையுடன்
வெளிவரவேண்டும்.

     குமரகுருபரரின் பாடல்கள் யாவும் இலக்கியச் சுவை மிகுந்தவை;
கற்கும் தோறும் இன்பமூட்டுபவை. அவரது பாடல்களுக்கு உரை
எழுதினால் மக்களிடையே பரவும். துறைமங்கலம் சிவப்பிரகாசர் பாடல்களும்
தாயுமானவர் பாடல்களும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின்
பாடல்களும் மக்களிடையே பரவாமல் இருப்பதற்குக் காரணம் தகுந்த
உரைகள் இல்லாமையேயாகும். சித்தர் பாடல்களும், செய்யுள் வடிவில்
உள்ள மருத்துவ நூல்களும் உரை இருந்தால்