பரிபாடல், பதிற்றுப் பத்து உரைகள் பரிபாடல், பதிற்றுப் பத்து ஆகிய நூல்களின் சிதைந்து போன பகுதிகளுடன் அவற்றிற்குரிய உரைப் பகுதிகளும் மறைந்து போயின. அடியார்க்கு நல்லார் உரை சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் உரை ஊர் சூழ்வரி என்ற பகுதி வரையில்தான் உள்ளது. நடுவே கானல் வரிக்கும் உரை இல்லை. நீலகேசி உரை நீலகேசியின் ஒன்பதாம் பகுதியாகிய வேத வாதச் சருக்கத்தில் எட்டுச் செய்யுட்களும் (22 முதல் 29 வரை) உரையும் காணப்படவில்லை. சீவக சிந்தாமணி-நச்சினாரக்கினியர் உரை தஞ்சைவாணன் கோவை உரையாசிரியர் சொக்கப்ப நாவலர், தஞ்சை வாணன் கோவை 276ஆம் செய்யுள் உரையில், காண்க என்பதற்கு அழகுதக என்று பொருள் எழுதியபின், “நித்தில முலையினார்தம் என்னும் சிந்தாமணிச் செய்யுளில் (1907), காண்க என்னும் சொற்கு அழகு தக என்று நச்சினார்க்கினியர் கூறிய உரையானும் அறிக” என்று கூறுகின்றார். இன்று அச்சில் வெளி வந்துள்ள சிந்தாமணி உரையில் சொக்கப்ப நாவலர் எடுத்துக் காட்டும் விளக்கம் இல்லை. நன்னூல் மயிலைநாதர் உரை நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் உரையிலிருந்து அது ஐந்திலக்கணமும் கூறும் பெரு நூல் என்பது விளங்குகின்றது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வார் பாடலுக்கு கூரத்தாழ்வான் பாடிய, நெஞ்சுக் கிருள்கடி தீபம்; அடங்கா நெடும்பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம்; தமிழநன் னூல்துறைகள் அஞ்சுக் கிலக்கியம்; ஆரண சாரம்; பரசமயப் பஞ்சுக் கனலின் பொறிபரகாலன் பனுவல்களே என்ற தனியன், நன்னூல் என்பது பவணந்தியாரின் இலக்கண நூலைக்குறிக்குமானால் இப்பாடலையும் ஏற்ற சான்றாகக் கொள்ளலாம். |