2 குண்டலகேசி கதை ‘குண்டலகேசி’ என்பாள், ஒரு வைசிய கன்னிகை. இவள் ஒரு நாள் பிரசாஸ்தலத்து விளையாடுகின்றாளாக, ஒரு கிதவப வைசியபுத்ரன் காளன் என்பான்; இவன் பௌத்தர் சனங்கொண்டு பல வழியும் சோர விருத்தி பண்ணிச் செல்வானை, அரசன் வதிக்க என்று ஏவ, சிறைப் பட்டுப் போகின்றானை, முன் சொன்ன குண்டல கேசி கண்டு காமப் பரவசையாக; அதனை அறிந்து அவளுடைய பிதா, ராசாவைக் கண்டு யாதானும் ஓர் உபாயத்தால் மீட்டு, இவனுக்குக் குண்டலகேசி என்னும் கன்னிகையினை விவாக விதியாற் கொடுத்து இனிது செல்கின்ற காலத்து, ஒரு நாள்: ப்ரணய கலகத்து நர்மோகதி முகத்தால், ‘நீ கள்வன் அன்றோ?’ என்று குண்டல கேசி சொல்ல, காளனும் தன் உள்ளத்தே சினங்கொண்டு, பின்பு ஒரு நாள் வித்யாசாதன வயாசத்தால் இவளைத் தனிக்கொண்டு ஒரு பர்வதத்து ஏறி, ‘நீ என்னை இவ்வாற சொல்லுதலில் யான் உன்னைக் கொல்லத் துணிந்தேன்!” என்ன, குண்டல கேசியும், ‘தற்கொல்லியை முற்கொல்லிய என்பதன்றே! இவனை யான் கொல்வேன்!’ என நினைந்து, ‘யான் சாகின்றேன் ஆகில், உம்மை வலங்கொண்டு சாவல்!’ என, அதற்கு இயைந்த காளனை வலம் கொள்கின்றாள் வரையினின்றும் விழ நூக்கினள். நூக்கக் காளனும் புத்த ஸ்மரணத்தினால் மோக்ஷித்தனன். குண்டல கேசியும் பர்த்ரு விரக துக்கிதை ஆகி, ‘துறப்பன்!’ என நினைந்து, பர சமயங்கள் எல்லாம் நாவல் நட்டுச்சயி்த்து, பௌத்த தர்சனம் கொண்டு முத்தி பெற்றனள். - நீல கேசி உரை (மொக்கல வாதச் சருக்கம்). 3 நாதமுனிகள் ஆழ்வார்கள் பர க்ருபையாலே இத் திவ்ய ப்ரபந்தங்களை உய்பவர்க்கு உய்யும் வண்ணமாக அருளிச் செய்து உபகரித்து அருளி, தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளின பின்பு நெடுங்காலம் கழிந்தவாறே, வீர நாராயணபுரத்திலே மன்னனாரைச் சேவித்து நித்யவாசம் பண்ணிக்கொண்டு அவர் திருவடிகளிலே சர்வவித கைங்கர்யங்களையும் செய்து கொண்டு போருகிற |