பக்கம் எண் :

உரையாசிரியர்கள்760

ஈஸ்வர பட்டாழ்வாரும் அவர் குமாரர் நாதமுனிகளும் அவர் குமாரர்
ஈஸ்வர முனிகளும்...மன்னனாருக்குத் திருநந்தவனம் செய்து, திருமாலை
கட்டிச் சாத்தி அமுதுபடி சாத்துபடி திருவிளக்கு முதலானவை எல்லாம்
குறைவற நடத்தி வித்வத் கோடிகளும் சாஸ்திர ப்ரவர்த்தனங்களும் எல்லாம்
பண்ணிக் கொண்டு இருக்கச் செய்தே...

     மேல்நாட்டில் (மேற்குத் திசையில் உள்ள மைசூர்ப் பகுதி) நின்றும்
சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுந்தருளி, மன்னனாரைச் சேவித்து அவர்
திருமுன்னே ‘ஆராஅமுதே’ என்கிற திருவாய் மொழியை அனுசந்தித்து
அருள; அத்தை நாதமுனிகள் கேட்டருளி, அதி ப்ரீதராய் அவர்களைப்
பார்த்து, “ஆயிரத்துள் இப்பத்து என்று இருந்தது. இப்பிரபந்தம் உங்களுக்கு
முற்றப் போமே?” என்று கேட்டருள; அவர்களும், “இப் பத்துப் பாட்டுமே
வருவது!” என்று விண்ணப்பம் செய்ய; இவரும், “உங்கள் நாட்டிலே ஸ்ரீ
கோசம் உண்டோ? பாடம் போவாரும் உண்டோ?” என்று கேட்டருள;
“எங்களுக்கு இவ்வளவு பாடம் வருவது; வேறு எவ்விடத்தி்லும் இல்லை!”
என்று அவர்கள் விண்ணப்பம் செய்ய, இவரும் அவர்களுக்கு
மன்னனாருடைய தீர்த்த பிரசாதமும் பிரசாதிப்பித்து அருளி...

     நாதமுனிகளும், ‘சடகோபன் அவதரித்து அருளின திருக்குருகூர்
பிரதேசத்தில் உண்டாக வேணும்!’ என்று திருநகரிக்கு எழுந்தருளி,
ஆழ்வாரையும் பொலிந்து நின்ற பிரானையும் சேவித்து, அங்கே ஸ்ரீ
மதுரகவிகளுடைய சிஷ்யரான ஸ்ரீ பராங்குச தாசரைச் சேவித்து,
‘இவ்விடத்திலே திருவாய்மொழி ஓதினாவர்கள் உண்டோ? ஸ்ரீ கோசம்
உண்டோ?’ என்று கேட்டருள: அவரும், திருவாய் மொழியும் மற்றும் உள்ள
திவ்விய பிரபந்தங்களும் நெடுங்காலம் உண்டு; பிரமுஷிதமாய்த்து இப்போது
எங்கள் ஆசார்யராண ஸ்ரீ மதுரகவிகள் அடியேனுக்கு, இக் கண்ணி நுண்
சிறுத்தாம்பு என்கிற திவ்வியப் பிரபந்தத்தை அருளிச் செய்தார்’ என்ன;
நாதமுனிகளும் ‘அந்தத் திவ்வியப் பிரபந்ததை அடியேனுக்குப் பிரசாதித்து
அருள வேணும்!’ என்று தண்டன் சமர்ப்பித்து விண்ணப்பம் செய்ய; அவரும்
இவருக்கு மிகவும் உவப்புடனே அந்தத் திவ்வியப் பிரபந்தத்தை ஓதுவித்
தருள...

     நாதமுனிகளும் தம்முடைய மருமக்களான கீழை அகத்து ஆழ்வாரையும்
மேலை அகத்து ஆழ்வாரையும் அழைத்தருளி... இத் திவ்வியப்
பிரபந்தங்களைத் திவ்விய கானத்தில் அடைத்து, இயலும் இசையுமாக்கிப்
பாடுவித்து அருள, இது லோகத்திலே பிரசித்தமாயிற்று.