4 இராமானுசர் ஆளவந்தார் ஸ்ரீபாதத்தில் ஆசிரயித்த முதலிகளில் பெரிய திருமலை நம்பி, வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர் என்கிறபடியே திருவேங்கடமுடையானை அடிக்கீழ் அமர்ந்து புகுந்து சேவித்துக் கொண்டு எழுந்தருளி இரா நிற்க; அவர் உடன் பிறந்த பெண் பிள்ளைகள் ஸ்ரீ பூமி பிராட்டியார் என்றும், பெரிய பிராட்டியார் என்றும் பெயருடைய இருவரிலே, மூத்த ஸ்ரீ பூமி பிராட்டியார் ஆசூரி கேசவப் பெருமாள் என்கிற சர்வ கிரது தீட்சிதர்க்குத் திருமணம் புணர்ந்தாள். இளைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் மழலை மங்கலத்துக் கமல நயன பட்டர்க்கு வடமணி குலத்திலே திருமணம் புணர்ந்தாள். அவர்களும் தம்தம் புக்கங்களிலே வாழும் காலத்திலே.... பெரிய திரு அனந்தாழ்வானும் ராமானுஜ திவாகரராய், ஸ்ரீ பெரும்புதூரிலே ஸ்ரீ பூமி பிராட்டியார் கர்ப்பத்தைப் பிராபித்து அருளி... ஆளவந்தாரும் இராமானுசரும் இளையாழ்வாரும் (இராமானுசரும்), அவரை (ஆள வந்தாரை)த் தண்டனிட்டுச் சேவிக்குமளவில், மூன்று விரல்கள் மடங்கி இருக்க இவரும் அது கண்டு, ‘முன்னும் இவர்க்கு இப்படி உண்டோ?’ என்று முதலிகளைக் கேட்க, அவர்களும்,’ ‘இல்லை! இப்போது கண்டது இத்தனை!’ என்ன இளையாழ்வாரும், ‘இவர் திருவுள்ளத்தில் ஏதேனும் ஒரு கருத்து உண்டாகவேணும்!’ என்று விசாரித்து அருளி முதலிகளைப் பார்த்து, ‘முன்பு வியாக்கியான சமயங்களிலே அபிமத சல்லாபங்களைக் கேட்டு அறிந்தவர்கள் உண்டோ?’ என்ன; ஸ்ரீ பாதத்து முதலிகள் எல்லோரும், ‘கூட வேறு ஒன்றும் அறியோம்! வியாசபராசரரிடத்திலே உபகார ஸ்மிருதியும், நம்மாழ்வார் பக்கல் பிரேமாதிசயமும், விசிஷ்டாத்துவைத பரமாக வியாச சூத்திரத்தில் வியாக்கியான வாஞ்சையும் பல காலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாய் இருக்கும் என்ன; இவரும் அகவாயில் எண்ணத்தில் ஏற்றம் அறிந்து, ‘இச் சரீரமும் திருடமாய்-இவ்வாசார்ய கிருபையும் அடியேன் இடத்தில் பரிபூர்ணமாய் இருக்கும் ஆகில்,சர்வேஸவரன் அடியேன் நினைத்தபடி கூட்டுவாராகில், இவ் இழிவு மூன்றையும் தீர்க்கக் கடவேன்!’ என்ன; உடனே திருவிரல்கள் நிமிர, இத்தைக் கண்டு அகிலரும் ஆச்சரியப்பட்டு, |