இவ் ஆசாரிய கிருபையும் உம் இடத்தில் உண்டு! இவருடைய திவ்விய சக்தியும் உம்மிலே கூடும்! நீரே இத் தரிசனத்துக்கு நிர்வாகரர் ஆவீர்!’ என்று சர்வரும் இவரை மங்களா சாசனம் பண்ண- 5 ஆறாயிரப்படி உடையவர் காலத்திலே ஆசாரியர்கள் எல்லாரும் உடையவர்க்கு ஒரு மானச புத்திரரான திருக்குருகைப் பிரான் பிள்ளானை அனுவர்த்தித்து, ’ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் அரும் பொருள் தெரியும்படிக்கு, தேவரீர் வியாக்கியானம் செய்தருளவேணும் என்று உடையவரை வேண்டிக்கொள்ள வேணும்!’ என்று பிள்ளானுக்கு விண்ணப்பம் செய்ய; பிள்ளானும், உடையவர் பெருங்கூட்டத் திருவோலக்கமாக எழுந்தருளி இருக்கச்செய்தே சாஷ்டாங்க பிரணாமம் பண்ணி, சவினராய், ’இரப்புடனே ஒரு விண்ணப்பம் உண்டு!’ என்று சொல்ல; உடையவரும் என் என்று கேட்டருளப் பிள்ளானும்; ‘தேவரீர்! ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து, திக் விஜயம் பண்ணி தரிசனத்தை நிலைநிறுத்தி அருளிற்று; இனி திருவாய்மொழி முதலான ஆழ்வார்ப் பிரபந்தங்களும் வியாக்கியானம் செய்து ரட்சித்து அருளவேணும்’ என்று விண்ணப்பம் செய்ய; உடையவரும் திருவுள்ளத்திலே விசாரித்து அருளி, ‘அப்படி, யாம் அருளிச் செயல்களுக்கு வியாக்கியானம் பண்ணினால், 1. ‘மந்த மதிகட்கு’, இவ்வளவே இதற்கு அர்த்தம் உள்ளது!’ என்று தோற்றுமாகில், அபசாரமாம். 2. ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு அவருடைய புத்திக்கு ஈடாகப்பஹூவாய்ச் சுரக்கும். 3. ஆகையாலே நாம், அருளிச் செயல்களுக்கு வரம்பு கட்டினாப்போலே ஆம். நீர், ஒருபடி திருவாய்மொழிக்கு வியாக்கியானம் பண்ணும்!’ என்று நியமித்து அருளினார். |