பக்கம் எண் :

763பிற்சேர்க்கை

திருக்குருகைப் பிரான் பிள்ளானும், எதிராஜர் அனுமதி கொண்டு ஸ்ரீ
விஷ்ணு பிரக்கிரியையாலே திருவாய் மொழிக்கு முந்துற முன்னம் இனிதாக
ஆறாயிரப்படி உரைத்தருளினார்.

6 

நஞ்சீயர் 

     பட்டரும் நஞ்சீயருக்குப் பிள்ளான்படி ஆறாயிரமும் நன்றாகப்
பிரசாதித்து அருளினார். நஞ்சீயரும் அத்தை நன்றாக அதிகரித்து, பட்டரை
அனேகமாக அனுவர்த்தித்து அவருடைய அனுமதிகொண்டு, திருவாய்
மொழிக்கு ஒன்பதினாயிரப் படியாக ஒரு வியாக்கியானம் பண்ணா நிற்கச்
செய்தே....

     வேதாந்திகாளன நஞ்சீயர், பட்டர் நல்லருள் சீர் கொண்டு
திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரமாக ஸ்ரீபாஷ்ய பிரக்கிரியையாலே ஒரு
வியாக்கியானம் செய்து, முற்றப் பட்டோலை கொண்டு ‘இத்தை ஒரு
சம்புடத்திலே நன்றாக எழுதித்தர வல்லார் உண்டோ?’ என்று சீயர் தம்
ஸ்ரீ பாதத்து முதலிகளைக் கேட்க;

     அவர்களும் ‘தென்கரையில் நின்றும் நம்பூர் வரதராஜர் என்பர் ஒருவர்
பல காலும்  இங்கே வருவர். அவர் நன்றாக எழுதுவர், என்று சீயருக்கு
விண்ணப்பம் செய்ய, சீயரும் வரதராஜரை அழைத்து, ‘ஒரு கிரந்தம் எழுதிக்
காட்டிக் காணீர்’ என்ன, வரதராஜரும் எழுதிக் காட்ட, சீயரும் அத்தைத்
திருக்கண் சாத்தியருளி, ‘எழுத்து முத்துப்போல நன்றாய் இருந்தது. ஆகிலும்,
இது திருவாய் மொழி வியாக்கியானம் ஆகையாலே, ஒரு விலட்சணரைக்
கொண்டு எழுதுவிக்க வேண்டுகையாலே-திரு இலச்சினை திருநாமம்
மாத்திரம் உண்டான இவரைக் கொண்டு எப்படி எழுதுவிப்பது?
விசேஜ்ஞரைக் கொண்டே எழுதுவிக்க வேணுமிறே’ என்று சந்தேகிக்க;

     வரதராஜரும் சீயர் திருவுள்ளத்தை அறிந்து, ‘அடியேனையும் தேவரீர்
திருவுள்ளத்துக்கு வரும்படியே திருத்திப் பணி கொள்ளலாகாதோ?’ என்ன;
அவ்வளவிலே சீயரும் திருவுள்ளம் உகந்து அப்போதே வரதராஜனை
அங்கரித்தருளி விசேஷ கடாட்சம் செய்தருளி பட்டோலையிலே எழுதின
ஒன்பதினாயிரமும், முற்ற ஓர் உரு வரதராஜனுக்கு அருளிச் செய்து
காட்டியருளி, ‘இப்படித் தப்பாமல் எழுதித்தாரும்! ‘என்று பட்டோலையை
வரதராஜர் கையிலே கொடுத்தருள, அவரும் அத்தை வாங்கிக் கொண்டு,
‘அடியேன் ஊரிலே எழுதிக்