பக்கம் எண் :

உரையாசிரியர்கள்764

கொண்டு வருகிறேன்!’ என்று விண்ணப்பம் செய்ய சீயரும், ‘அப்படியே
செய்யும்!’ என்றுவிட;

     அனந்தரம் (பிறகு), வரதராஜன் திருக்காவேரிக்குள்ளே எழுந்தருளின
அளவிலே சற்று இடம் நீஞ்சிப் போக வேண்டுகையாலே, பட்டோலையைத்
திருமுடியிலே கட்டிக் கொண்டு நீஞ்சி வரச்செய்தே, ஒருஅலை வந்து
அடித்துக் கிரந்தம் ஆற்றுக்குள்ளே விழுந்து போக, வரதராஜரும்
அக்கரையிலே ஏறி, ‘பட்டோலை போய் விட்டதே! இனி நாம் என் செய்யக்
கடவோம்?’ என்று விசாரித்து, ஒரு அலேகத்தை உண்டாக்கிக் கொண்டு,
நஞ்சீயர் பிராசாதித்து அருளின அர்த்தம் ஒன்றும் தப்பாமல்
ஒன்பதினாயிரமும் நன்றாக எழுதியருளி,

     தாம்  தமிழுக்கு மிகவும் உத்தம விரகர் ஆகையாலே ஒவ்வொரு
பாட்டுக்களிலே உசிதமான தலங்களுக்குப் பிசரனன்ன கம்பீர பதங்களுக்கு
அர்த்த விசேஷங்களும் எழுதிக் கொண்டு போய், சீயர் திருக்கையிலே
கொடுக்க;

     சீயரும் ஸ்ரீ கோசத்தை அவிழ்த்துப் பார்க்கும் அளவில், தாம்
அருளிச் செய்த கட்டளையாய் இருக்கச் செய்தேயும், சப்தங்களுக்கு மிகவும்
அணுகுணமான அனேக விசேஷ ஷார்த்தங்கள் பல இடங்களிலும் எழுதி
இருக்கையாலே, அத்தைக் கண்டு மிகவும் திருவுள்ளம் உகந்து அருளி,
வரதராஜரைப் பார்த்தருளி, ‘இது மிகவும் நன்றாய் இரா நின்றது! இது என்?’
என்று கேட்க; அவரும் பயப்பட்டு ஒன்றும் விண்ணப்பம் செய்யாது இருக்க
சீயரும், ‘நீர்பயப்பட வேண்டாம்! உண்மை சொல்லும்!’ என்ன;

     வரதராஜரும், ‘திருக்காவேரி நீச்சாகையாலே பட்டோலையை
அடியேன் தலையிலே கட்டிக் கொண்டு நீஞ்சப் புக்கவாறே, ஒருஅலை
வந்து அடிக்கையாலே, அது ஆற்றிலே விழுந்து அழிந்துபோயிற்று. இது
தேவரீர் ஓர் உருமுற்ற பிராசித்து அருளின கட்டளையாலே எழுதினேன்’
என்று விண்ணப்பம் செய்ய;

     நஞ்சீயரும், ‘இவருடைய ஒருபுத்தி விசேஷம் இருந்த படி என்! இவர்
மகா சமர்த்தராய் இருந்தார். நன்றாக எழுதினார்’ என்று மிகவும் திருவுள்ளம்
உகந்து அருளி, வரதராஜரை வாரி எடுத்து அழுந்தக் கட்டிக் கொண்டு,
‘இவர் நம்முடைய திருக்கவி கன்றிதாசர்’ என்று திரு நாமம் சாற்றி,
தம்முடைய சந்நிதியிலே அரைக் கணமும் பிரியாமல் கரதலாமலகமாக
வைத்துக் கொண்டு, பிள்ளைக்குச் சகலார்த்தங்களும் பிரசாதித்து அருளினார்.
அருளிச் செய்த அன்று தொடங்கி வரதராஜர்க்கு ‘நம்பிள்ளை’ என்று
திருநாமம் உண்டாயிற்று.