பக்கம் எண் :

உரையாசிரியர்கள்80

தடாகத்தில் படிந்து பூப்பந்தர்தோறும் நுழைந்து தேனும் மணமும் நுகர்ந்து
குளிர்ந்து மெல்லென்று வீசுவதாய்ப் பரஞ்சோதியார் பாடுகின்றார். ஒவ்வோர்
உரையாசிரியரும் அங்கங்கே கலைகள் தேரும் அறிவனாய் விளங்குகின்றார்.

தமிழ்மீட்சி இயக்கம்

    உரையாசிரியர்கள் தோன்றிய இடைக்காலத்தின் நிலைமையைத்
தமிழறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை பின்வருமாறு கூறுகின்றார்:

     “சங்க காலத் தமிழ் வழக்கு நின்றுபோய் வெகுகாலமாகி விட்டது.
அதன் சிறப்பியல்புகளான இனிமை தெளிவு சுருக்கம் நேர்மை முதலிய
பண்புகள் யாவும் பெரும்பான்மை இலக்கியங்களின்றும் நீங்கிப் பல
நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. இடைக் காலத் தமிழ் பிறந்து வடமொழிச்
சொற்களும் வடமொழிக் காவிய மரபுகளும் தமிழிற் குடிபுகுந்தன. பலவேறு
நல்லியல்புகளும் தமிழில் வந்து அமைந்தன. ஆனால் அவற்றோடு சில தீய
தன்மைகளும் புகுந்துவிட்டன. சுருக்கம் நேர்மை என்ற இயல்புகள் இரண்டும்
ஒழிந்து போயின; அலங்காரங்களும் ஆடம்பரங்களும் தலையோங்கிவிட்டன.
வடசொற்கள் பெரும்பான்மை விரவித் தமிழ்ச் சொற்கள் சிறுகி
வரத்தொடங்கின. இதனால் தமிழுக்கு இயற்கையாய் அமைந்திருந்த ஆற்றல்
சிறுகலாயிற்று. நூற்பொருள் பெரும்பாலும் வடமொழிக்கு உரியனவாய்
முடிந்தன. இதனால் தமிழ்க் கவிஞர்களின் புதுவது இயற்றும் ஆற்றல்
தடைபட்டுப்போயிற்று.”*

     இத்தகைய நெருக்கடியான நிலையை-தெளிவில்லாத காலத்தை
உரையாசிரியர்கள் மாற்றிப் பழந்தமிழை மீட்டனர் என்பதைப்
பிள்ளையவர்கள் கீழே உள்ளவாறு விளக்குகின்றார்கள்:

     “அக்காலத்துக் கல்வியாளர் சிலர், இந் நிலைமைக்கு வருந்தினர்.
தமிழின் பண்டை நிலையை உன்னியுன்னி அந்நிலையைத் திரும்ப எய்துதல்
கூடுமா என்று கருதலாயினர். சங்கத் தமிழின்மீதும், அதன் நன்முறையைக்
கைப்பற்றிய பெருநூல்களின்மீதும் பொதுமக்கள் பற்றுக்கொண்டு கற்கும் படி
செய்யவேண்டுமென்று எண்ணினர். அவற்றின் நல்லியல்புகள் தமிழில்
மீண்டும் தழைக்க வேண்டுமென்று கருதினர். இந் நோக்கங்களைக்கொண்டு
கல்வியில் தலைசிறந்தோர் சிலர் உழைத்து வந்தனர். சங்கத் தமிழுக்கு
மீட்சியியக்கம் நிகழ்வ


* தமிழ்ச் சுடர்மணிகள் (1968) பக். 197, 198.