பக்கம் எண் :

36விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

     "தமிழ்நாடு-இன்று புதிதாக அன்று, நெடுங்காலமாக, தலைமையொளி வீசி
வருதல்  எல்லோருக்கும்  தெரிந்த விஷயம்... "எம்மதமும் சம்மதம்" என்கிறார்
ராமலிங்கஸ்வாமி.

     "உலகத்திலுள்ள  மதபேதங்கள  யெல்லாம்  வேருடன் களைந்து ஸர்வ
ஸமய ஸமரஸக்  கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்குத் தமிழ்
நாடே  சரியான  களம். உலக  முழுவதும்  மத விரோதங்களில்லாமல்  ஒரே
தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி  செய்யவல்ல மஹான்கள் இப்போது
தமிழ்நாட்டில்  தோன்றியிருக்கிறார்கள்.  அதுபற்றியே   பூமண்டலத்தில் புதிய
விழிப்பு தமிழகத்தே தொடங்கு மென்கிறோம்.

      "ராமலிங்க  சுவாமிகளும்...  வேறு  சில மகான்களும் தமிழ் நாட்டின்
புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர்."

     "பூமண்டல    முழுதிலும்   பெரிய   விழிப்பொன்று   வரப்போகிறது.
அதற்காதாரமாக  ஹிந்துஸ்தானம்  கண்ணை  விழித்து இருபதாண்டுகளாயின.
ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ்நாடு முதலாவது கண் விழித்தது."1

மாயூரம் வேதநாயகனார்

      வள்ளற்  பெருமானுக்கு   அடுத்தவராக  நம்  கவனத்தைக்  கவர்ந்து
நிற்பவர் மாயூரம் முன்சீப் வேதநாயகனாராவார்.

     இப்பெரியார்    கிறித்துவ    சமயத்தைச்    சார்ந்தவராயினும்,  சமய
வேற்றுமைகளிடயே   ஒன்றுமையை   வளர்க்க,  தாம்  பெற்றிருந்த  தமிழ்ப்
புலமையைப்  பயன்படுத்தி, அரிய இலக்கியங்களைப் படைத்தார். "சர்வ சமய
சமரசக் கீர்த்தனைகள்"  என்னும் கவிதை  இலக்கியம் அவருடைய படைப்புக்
களில்  தலை  சிறந்ததாகும். உலகனைத்துக்கும்  ஒரே  தெய்வம்  - பொதுத்
தெய்வம்    என்னும்    கொள்கைப்படி,    பக்திப்பாடல்கள்   பலவற்றைப்
புனைந்தருளினார்.   இத்துறையில்   அப்பெரியார்  வள்ளற் பெருமானையே
பின்பற்றினார் எனலாம்.

     வேதநாயகனார்,      சமுதாயத்தில்    உள்ள    பல     வகையான
ஊழல்களை   எதிர்ப்பதிலே   அக்கரை   காட்டினார்.  மாவட்ட   நீதிபதி
யாகச்  சிலகாலம்    பதவி  வகித்தாராதலால்,   நீதிமன்றங்களிலே   நிலவி
வரும்  லஞ்ச  ஊழல்களைச்  சாடிப்  பாடினார்.   அரசாங்க   அலுவலகங்
களிலே   காணப்படும்    நிர்வாக     ஊழல்களையும்    பொதுமக்களறிய


1.பாரதி கட்டுரை, தமிழ்நாட்டின் விழிப்பு; பக்.196-97, 413.