பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 41

கங்களிலிருந்து    விடுவிப்பதிலேயும்     கவனஞ்செலுத்தினர்.       அவர்
களில்   இராமலிங்க   சுவாமிகள்,  மாயூரம்   வேதநாயகனார்,    'மனோன்
மணீயம்'    சுந்தரனார்,   பரிதிமாற்   கலைஞர்,  டாக்டர்      உ.வே.சாமி
நாதய்யர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

      வள்ளற்பெருமான்,  வடமொழியில் புலமை பெற்றிருந்தவர். அம்மொழி
யிலுள்ள  வேதாகம  சாத்திர தோத்திர  நூற்களைக்   கற்றறிந்தவர்.ஆயினும்,
"வடமொழி  ஒன்றே தேவ மொழி; தமிழ்  உள்ளிட்ட  ஏனைய மொழிகளுக்கு
அந்தச் சிறப்பில்லை" என்று வடமொழிப்புலவர் சிலர் கொண்டிருந்த கருத்தை
அவர்   ஏற்கவில்லை;  எதிர்த்தும்  வந்தார்.   தமிழ்மொழி,   வடமொழிக்கு
இணையானது,  சில  வகையில்  அதனினுஞ்  சிறந்தது  என்ற  கருத்தினைக்
கொண்டிருந்தார். தம் காலத்தில் வாழ்ந்த காஞ்சி  காமகோடி  பீடாதிபதியான
சங்கராச்சாரிய  சுவாமிகளைத்  தாம் சந்திக்க   நேர்ந்தபோது,  "மொழிகளுக்
கெல்லாம்  தாய்மொழி   சமஸ்கிருதமே" என்று  ஆசாரிய  சுவாமிகள்  கூற,
அதனை  மறுக்காமல், "ஆயின்,  தமிழ் தந்தை   மொழி" என்று  கூறி,  தம்
தாய்மொழி  உயர் ஆரியத்திற்கு  நிகரானதென்ற கருத்தினை வலியுறுத்தினார்
வள்ளலார்.

      இராமலிங்கர்,  'தமிழ்' என்னும்  பெயருக்குச் சுத்த  சித்தாந்த ரீதியில்
விளக்கந்தந்து  தனிக்கட்டுரையொன்று  எழுதியுள்ளார்.   அதில்   ஒருபகுதி
வருமாறு:

     "ஆரியம்,  மகாராட்டிரம்,  ஆந்திரம்  என்ற  பற்பல   பாஷைகளைப்
போலாகாமல்  -  பெரும்பாலும்   கற்பதற்கு   எண்ணளவு    சுருக்கமாயும்
ஒலியிலேசாயும்,  கூட்டென்னுஞ்  சந்தி  அதி  சுலபமாயும்   எழுதவும் கவி
செய்யவும் மிக நேர்மையாயும் அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம்  முதலிய
பெண்மை  அலங்காரமின்றி  எப்பாஷையின்  சந்தசுகளையும்    தன்பாஷை
யுள்ளடக்கி  ஆளுகையால்  ஆண்டன்மையைப்  பொருந்தியமான      தற்
பாஷைக்கே  அமைவுற்ற ழ் - ற் - ன் என்னும் முடி  நடு அடி  சிறப்பியலக்
கரங்களில் முடிநிலை இன்பாநுபவ சுத்த  மோனாதீதத்தைச் சுட்டறச் சுட்டும்
இயற்கையுண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியலொலியாம்."1

ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு!

    வேதநாயகர்   வாழ்ந்த   காலத்தில்,  பிரிட்டிஷ்  இந்தியத்   தமிழகத்து
மக்கள்    ஆங்கில      மொழியிடத்தும்  ;  பிரெஞ்சு       இந்தியாவான