புதுவை - காரைக்கால் பிரதேசத்து மக்கள் பிரெஞ்சு மொழியிடத்தும், சமய வாதிகளான புரோகிதர்கள் சமஸ்கிருத மொழியினிடத்தும், பாதிரிமார் லத்தீனிடத்தும் அதிகப் பற்று வைத்து, தங்கள் தாய்மொழியான தமிழைப் பயிலாது புறக்கணிப்பாராயினர். இந்த நிலைகண்டு மனம் பொறாத வேதநாயகனார். "தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க யோக்கியதை உடையவர் கள் அல்லர். அவர்கள் எந்த ஊர்ப்பாஷைகளைப் படிக்கிறார்களோ அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இடமாகையால், சுயபாஷையைப் படிக்காமல் இங்கிலீஷ் மட்டும் படிக்கிறவர்களை, இங்கிலீஷ் தேசத்துக்கு அனுப்பி விடுவோம். பிரெஞ்சு மட்டும் படிப்பவர்களைப பாரீசுப் ( PARIS ) பட்டணத்துக்கு அனுப்புவோம்; லத்தீனுக்கும் (LATIN) சமஸ்கிருதத்திற்கும் சொந்த ஊர் இல்லாதபடியால், அந்தப் பாஷைகளைப் படிப்பவர்களை அநாமகரணத்தீவுக்கு அனுப்புவோம்."1 ஆங்கில ஆதிக்கத்தை வெறுத்தும் எதிர்த்தும் கவிதைகள் பாடினார் வேதநாயகர். ஆங்கிலம் ஒன்றையே கற்றார் - அதற்கு ஆவியோ டாக்கையும் விற்றார் தாங்களும் அந்நிய ரானார்-இன்பத் தமிழின் தொடர்பற்றுப் போனார் என்ற கவிதையிலே, பரங்கிமொழிப் பக்தர்களின் பரிதாப நிலையை நினைத்து இரங்குகின்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தமிழக நீதிமன்றங்களிலே ஆங்கிலம் புகுந்து, தமிழை அடிமைப்படுத்தி, அதன்மீது ஆதிக்கங்கொள்ளத் தொடங்கியது. அந்தக் காலத்திலேயே ஆங்கில ஆதிக்கத்தைச் சாடினார் வேதநாயகர். "தமிழகக் கோர்ட்டுகளிலே தமிழ் வக்கீல்கள் தமிழில் வாதிக்காமல், ஆங்கிலத்திலே வாதிக்கிறார்கள். தேச மொழியும் தமிழ் ; கோர்ட்டிலே வழங்குகிற மொழியும் தமிழ் ; நியாயாதிபதியும் தமிழர். வாதிக்கிற வக்கீலும் தமிழர் ; கட்சிக்காரர் தமிழர். எல்லாம் தமிழ் மயமாயிருக்க, யாருக்குப் பிரீதியாக அவர்கள் ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களோ, தெரியவில்லை. நியாயாதிபதி அல்லது வக்கீல் ஆங்கிலரா இருந்தால் ஆங்கிலத்திலே வாதிப்பது நியாயம். தமிழ் நியாதிபதி முன் தமிழ் வக்கீல் |