பக்கம் எண் :

116சத்திய சோதனை

Untitled Document
ஊதியம் நம் பொது வருமானத்தில் சேர்ந்துவிடுகிறது. எனவே, அதில்
எனக்கு ஒரு பங்கு,       தானே கிடைத்துவிடுகிறது. ஆனால், என்
கூட்டாளியின் நிலைமை என்ன?       உனக்குக் கொடுக்கும் அதே
வேலையை,    அவர் வேறொரு பாரிஸ்டரிடம் கொடுக்கிறார் என்று
வைத்துக்கொள்ளுவோம்.     அப்பொழுது இவருக்கு அவரிடமிருந்து
நிச்சயமாகத் தரகுப் பணம் கிடைத்து விடும்!”  இந்த வாதம் என்னை
மாற்றிவிட்டது.    நான் பாரிஸ்டர் தொழிலை நடத்த வேண்டுமானால்
இத்தகைய வேலைகளுக்குத்  தரகு கொடுப்பதில் என் கொள்கையை
வற்புறுத்தமுடியாது         என்பதை உணர்ந்தேன்.  இப்படித் தான்
எனக்குள்ளேயே நான்    விவாதித்துக் கொண்டேன்;  உண்மையைச்
சொன்னால்,     என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன் ; என்றாலும்,
இன்னும் ஒன்றும் கூறுவேன். இங்கே     கொடுத்ததைத் தவிர வேறு
எந்த வழக்குச் சம்பந்தமாகவும்    நான் தரகு கொடுத்ததாக நினைவு
இல்லை.

     இவ்விதம் என் வாழ்க்கைச்   செலவுக்குப் போதுமானதை நான்
சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். என்றாலும் இச்சமயத்தில்தான், என்
வாழ்க்கையிலேயே   முதல் அதிர்ச்சியும் எனக்கு உண்டாயிற்று. ஒரு
பிரிட்டிஷ் அதிகாரி      என்றால் அவர் எப்படியெல்லாம் இருப்பார்
என்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால்,அச் சமயம் வரையில்,
அப்படிப்பட்ட     ஒருவரை நான் நேருக்கு நேராகப் பார்த்ததில்லை.

     போர்பந்தரின்     காலஞ்சென்ற   ராணா சாகிப் பட்டத்திற்கு
வருவதற்கு    முன்னால்,    என்    சகோதரர்       அவருக்குக்
காரியதரிசியாகவும்     ஆலோசகராகவும் இருந்தார். என் சகோதரர்
அந்த      உத்தியோகத்தில்   இருந்தபோது ராணாவுக்குத் தவறான
ஆலோசனைகளைக் கூறிவிட்டார் என்ற    ஒரு குற்றச்சாட்டை என்
சகோதரரின் தலை மீது   இப்பொழுது சுமத்தியிருந்தார்கள். விஷயம்
ராஜீய ஏஜெண்டிடம் போய்விட்டது. அவரோ,   என் சகோதரர் மீது
கெட்ட         அபிப்ராயம் கொண்டிருந்தார்.  நான் இங்கிலாந்தில்
இருந்தபோது, இந்த அதிகாரியை அறிவேன்.   ஓர் அளவுக்கு அவர்
எனக்கு நண்பராகவும்        இருந்தார் என்று சொல்லலாம். அந்தச்
சிநேகிதத்தைப்   பயன்படுத்திக்கொண்டு, ராஜீய      ஏஜெண்டிடம்
தம்மைப்பற்றி        நான்  பேசி,   அவருக்கு   இருந்த தவறான
அபிப்பிராயத்தை நான் போக்க வேண்டும் என்று    என் சகோதரர்
விரும்பினார்.      இந்த யோசனை எனக்கு கொஞ்சமும் பிடிக்கவே
இல்லை.    இங்கிலாந்தில்     ஏற்பட்ட      சொற்ப நட்பை நான்
பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கக்கூடாது என்று எண்ணினேன். என்
சகோதரர் செய்தது தவறாகவே இருக்கு மாயின்,  என் சிபாரிசினால்
என்ன பயன்?         அவர் குற்றமற்றவர் என்றால்,   முறைப்படி
விண்ணப்பத்தை     அனுப்பிவிட்டுத் தாம்        நிரபராதி என்ற
தைரியத்துடன், முடிவை    எதிர்நோக்குவதே சரியானது. ஆனால்,
நான் கூறிய இந்த யோசனை என் சகோதரருக்குப்