பக்கம் எண் :

ஓர் எச்சரிக்கை 325

Untitled Document
எழுதியிருக்கிறேன்.              அந்த நோக்கமே என் செயல்கள்
ஒவ்வொன்றிற்கும்          ஆக்கம் அளித்திருக்கிறது. ஆகையால்,
அப்புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும்   சில தத்துவங்களை இன்று நான்
அனுசரிக்க முடியாமல் இருப்பது       எனக்கு ஆழ்ந்த துயரத்தை
அளித்துவருகிறது.

     குழந்தையாக இருக்கும்போது உண்ணும்   தாய்ப்பாலைத் தவிர
மனிதன் பால் சாப்பிட வேண்டிய      அவசியமே இல்லை என்பது
என்னுடைய திடமான நம்பிக்கை. சூரிய வெப்பத்தினால் பக்குவமான
பழங்களையும் கொட்டைகளையும் தவிர     மனிதனுடைய உணவில்
வேறு           எதுவுமே இருக்கக்கூடாது.     திராட்சை போன்ற
பழங்களிலிருந்தும், பாதாம்   பருப்புப்போன்ற கொட்டைகளிலிருந்தும்
மனிதன் தசைகளுக்கும் நரம்புகளுக்கும் வேண்டிய போஷணையைப்
போதுமான அளவு பெற முடியும். இத்தகைய  உணவோடு இருக்கும்
ஒருவருக்குச் சிற்றின்ப இச்சை   போன்ற இச்சைகளை அடக்குவது
எளிதாகிறது. “ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ    அது போலவே
ஆகிறான்” என்ற இந்தியப்         பழமொழியில் அதிக உண்மை
இருக்கிறது என்பதை நானும் என் சக ஊழியர்களும்  அனுபவத்தில்
கண்டிருக்கிறோம்.    இக் கருத்தே    அப் புத்தகத்தில் விரிவாகக்
கூறப்பட்டிருக்கிறது.

     ஆனால், துரதிருஷ்டவசமாக       இந்தியாவில் என்னுடைய
கொள்கைகளில் சிலவற்றை, என் நடைமுறையில்    எனக்கு நானே
மறுத்துக்கொள்ள வேண்டியவனாகிறேன்.    போருக்காகப் படைக்கு
ஆள் சேர்க்கும் பிரச்சாரத்தில் கேடாவில்      நான் ஈடுபட்டிருந்த
சமயத்தில்       உணவில் ஏற்பட்ட ஒரு தவறு,  என்னைப் படுக்க
வைத்துவிட்டது.    இறக்கவேண்டிய நிலைமைக்கும் வந்துவிட்டேன்.
அதனால்,       சிதைந்துபோன   உடலைப் பால் சாப்பிடாமலேயே
தேற்றிக்கொண்டுவிட நான் வீணில்  முயன்றேன். பாலுக்குப் பதிலாக
வேறு ஒன்றை எனக்குக் கூறுமாறு எனக்குத்   தெரிந்த டாக்டர்கள்,
வைத்தியர்கள், விஞ்ஞானிகள் ஆகியவர்களையெல்லாம் கேட்டேன்.
மூங்குநீர், மௌரா எண்ணெய், பாதாம்-பால்      ஆகியவைகளைச்
சாப்பிட்டுச் சோதனை செய்து என்        உடல் நிலையை மேலும்
கெடுத்துக் கொண்டேன்.  நோயிலிருந்து எழ எதுவும் எனக்கு உதவி
செய்யவில்லை. ஆயுர்வேத வைத்தியர்கள்,        சரகர் வைத்திய
சாத்திரத்திலிருந்து சில பாடல்களை எனக்குப் படித்துக்   காட்டினர்.
நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதில்      மதக் கோட்பாடுகளைக்
கவனிக்கக் கூடாது           என்று அவை கூறின. ஆகவே பால்
சாப்பிடாமலேயே வாழ்வதற்கு எனக்கு    உதவி செய்ய அவர்களை
எதிர்பார்த்துப் பயனில்லை. மாட்டு மாமிச சூப்பையும் பிராந்தியையும்
சாப்பிடுமாறு தயக்கமின்றிச் சிபாரிசு செய்கிறவர்கள், பால்   இல்லாத
ஆகாரத்தைக் கொண்டு நான் உயிர்வாழ உதவி