பக்கம் எண் :

ஒதுக்கலிடம் எரிந்தது 355

Untitled Document
அடிக்கடி போய்க் கொண்டிருந்தது       அவர்களுக்குக் கொஞ்சம்
ஆறுதலாக இருந்தது. ஏழைகள் பலர்,         தங்களிடமிருந்த சிறு
பொருள்களையெல்லாம்        புதைத்து  வைத்துவிடுவது வழக்கம்.
அவற்றையெல்லாம்            தோண்டி எடுக்க வேண்டியிருந்தது.
அவர்களுக்குப்    “பாங்கு”கள் இல்லை. “பாங்க்” என்பது இன்னது
என்றே அவர்களுக்குத் தெரியாது.         நானே அவர்களுடைய
‘பாங்க்கரானேன்’ ஏராளமான பணம் வந்து     என் அலுவலகத்தில்
குவிந்தது. இத்தகையதோர் நெருக்கடியில்       என் உழைப்புக்காக
எந்தக்  கட்டணமும்          விதிப்பதற்கில்லை. எப்படியோ இந்த
வேலைகளையும்    சமாளித்துக் கொண்டேன்.       நான் கணக்கு
வைத்திருந்த பாங்கின் நிர்வாகியை        நான் நன்றாக அறிவேன்.
இப்பணத்தையெல்லாம்        அவர் பாங்கில் நான் போட்டுவைக்க
வேண்டியிருக்கிறது என்று           அவரிடம் கூறினேன். செப்புக்
காசுகளையும்          வெள்ளிப் பணத்தையும் ஏராளமாக வாங்கிக்
கொள்ளுவது       சிரமமானதால்      வாங்கிக்கொள்ள அவர்கள்
விரும்புவதில்லை.      பிளேக் நோய் பரவியிருக்கும் பகுதியிலிருந்து
வருகிற பணம்        என்பதனால், அதைத் தொடுவதற்கும் பாங்குக்
குமாஸ்தாக்கள் மறுத்து விடக்கூடும்        என்ற பயமும் இருந்தது.
ஆனால், பாங்கு நிர்வாகி எல்லா வகையிலும் எனக்குச்  சௌகரியம்
செய்து கொடுத்தார்.            அப்பணத்தையெல்லாம் பாங்குக்கு
அனுப்புவதற்கு முன்னால்    அவற்றில் விஷக்கிருமிகள் இல்லாதபடி
மருந்து கொண்டு சுத்தம் செய்து அனுப்புவது என்று தீர்மானித்தோம்.
சுமார் அறுபதாயிரம் பவுன் வரையில் பாங்கில் கட்டினோம்  என்பது
எனக்கு ஞாபகம். பணம் அதிகமாக வைத்திருந்தவர்களை-குறிப்பிட்ட
காலத்திற்குப்      பிறகே வாங்குவது என்ற முறைப்படி-டிபாசிட்டில்
போடும் படி சொன்னேன்.         அவர்களும் என் யோசனையை
ஏற்றுக்கொண்டார்கள். இதன் பலனாக,         பணத்தைப் பாங்கில்
போட்டுவைக்கும் வழக்கத்தைச் சிலர் கைக்கொண்டார்கள்.

     ஒதுக்கல் பகுதியில் இருந்தவர்களைத்         தனி ரெயிலில்
ஜோகன்னஸ்பர்க்குக்கு    அருகில் கிளிப்ஸ் புரூயிட் பண்ணைக்குக்
கொண்டு போயினர்.        அங்கே அவர்களுக்கு நகரசபை தனது
சொந்தச் செலவில்        உணவுப் பொருள்களை அளிக்க ஏற்பாடு
செய்தது.          கூடாரங்களினாலாகிய இந்த நகரம், ஒரு ராணுவ
முகாம்போலத்        தோன்றியது. மக்கள், கூடாரங்களில் வாழ்ந்து
பழக்கமில்லாததனால்     எப்படி இருக்குமோ என்று கஷ்டத்துடன்
இருந்தார்கள். ஆனால், அங்கே செய்யப்பட்டிருந்த  ஏற்பாடுகளைக்
கண்டு திகைத்துப் போயினர். குறிப்பிடத்தக்க அசௌகரியம் எதுவும்
அவர்களுக்கு இல்லை. தினமும் சைக்கிளில் அந்த இடத்திற்கு நான்
போய் வருவேன். அங்கே குடியேறிய       இருபத்து நான்கு மணி
நேரத்திற்குள் மக்கள்       தங்கள் துன்பங்களையெல்லாம் மறந்து