பக்கம் எண் :

432சத்திய சோதனை

Untitled Document
சாதத்துடன் சாப்பிடுமாறும் கூறினார்.    இந்த மாறுதல்கள் எனக்குப்
பிடித்தன. ஆனால், இவைகளினாலும்   பூரண குணம் ஏற்படவில்லை.
அதிக ஜாக்கிரதையான        பணிவிடை அவசியமாகவே இருந்தது.
பெரும்பாலும் நான் படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது.

     என்னைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக      டாக்டர் மேத்தா
அவ்வப்போது வருவதுண்டு.        தாம் சொல்லுகிறபடி கேட்பதாய்
இருந்தால், என் நோயைக்           குணப்படுத்திவிடுவதாக அவர்
எப்பொழுதும் சொல்லி வந்தார்.

     நிலைமை இவ்வாறு           இருந்து வரும்போது ஒருநாள்,
ஸ்ரீ ராபர்ட்ஸ் என்னைப் பார்க்க வந்தார். தாய் நாட்டுக்குத்  திரும்பி
விடுமாறு அவர் வற்புறுத்திச் சொன்னார்.      “இந்த நிலைமையில்
நீங்கள் நெட்லிக்குப் போவதுசாத்தியமே இல்லை. இனி வரப்போவது
கடுமையான குளிர்காலம். இந்தியாவில் தான் நீங்கள்    பூரணமாகக்
குணமடைய முடியுமாகையால் அங்கே நீங்கள் போய்விட வேண்டும்
என்று உங்களுக்குக் கண்டிப்பாகக் கூறுகிறேன்.     அங்கே நீங்கள்
குணமடைந்த பிறகு       அப்பொழுதும் யுத்தம் தொடர்ந்து நடந்து
கொண்டு இருந்தால், நீங்கள்         உதவி செய்ய அங்கே அநேக
வாய்ப்புகள் இருக்கின்றன. இப்பொழுதுகூட,      நீங்கள் இது வரை
செய்து இருப்பது எந்த விதத்திலும் அற்பமானது என்று  நான் கருத
வில்லை.”

     அவருடைய யோசனையை ஏற்றுக்கொண்டேன்.இந்தியாவுக்குத்
திரும்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலானேன்.

43 தாய்நாடு நோக்கி

     இந்தியாவுக்குப் போவதற்காக    ஸ்ரீ கால்லென்பாக் என்னுடன்
இங்கிலாந்துக்கு வந்தார். இருவரும்   ஒன்றாகவே வசித்து வந்தோம்.
ஒரே கப்பலிலேயே புறப்படவும்        விரும்பினோம். அப்பொழுது
ஜெர்மானியர் மீது கண்காணிப்புக் கடுமையாக      இருந்து வந்தது.
ஆகையால், ஸ்ரீ கால்லென்பாக்குக்குப் பிரயாண    அனுமதிச் சீட்டுக்
கொடுப்பதற்கு ஸ்ரீ ராபர்ட்ஸ் ஆதரவாக இருந்தார்.   இதைக் குறித்து
வைசிராய்க்கும் அவர் தந்தி கொடுத்தார்.          “வருந்துகிறோம்.
அத்தகைய அபாயம் எதற்கும்          உட்பட இந்திய அரசாங்கம்
தயாராயில்லை” என்று லார்டு ஹார்டிஞ்சிடமிருந்து நேரடியான பதில்
வந்துவிட்டது. அந்தப் பதிலில் அடங்கியிருந்த நியாயத்தை   நாங்கள்
எல்லோரும் உணர்ந்து கொண்டோம்.

     ஸ்ரீ கால்லென்பாக்கை விட்டுப் பிரிவது       எனக்கு மிகுந்த
வேதனையாக இருந்தது. அவருக்கு இருந்த துயரம் இன்னும் அதிகம்
என்பதைக் கண்டேன். அவர்    இந்தியாவுக்கு வர முடிந்திருந்தால்,
அவர் இன்று ஒரு குடியானவனாகவும்,