பக்கம் எண் :

576சத்திய சோதனை

Untitled Document
எல்லோரும் எளிதில் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

     இக்கூட்டத்தில்   மௌலானா ஹஸரத் மோகானி பிரசன்னமாகி
இருந்தார்.      அதற்கு முன்பே அவரை நான் அறிவேன். ஆனால்,
அவர் எவ்வளவு சிறந்த          போராட்ட  வீரர் என்பதை நான்
அங்கேதான் தெரிந்துகொண்டேன். ஆரம்பம் முதற்கொண்டே நாங்கள்
இருவரும் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களாக இருந்தோம். அநேக
விஷயங்களில் இக்கருத்து வேற்றுமைகள் தொடர்ந்து இருந்து வந்தன.

     இம்மகாநாட்டில் பல            தீர்மானங்கள் நிறைவேறின.
அத்தீர்மானங்களில் ஒன்று,    ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சுதேசி
விரதம் கொள்ளவேண்டும் என்று    கேட்டுக்கொண்டதோடு, அதை
அனுசரிப்பதையொட்டி,        அந்நியச் சாமான்களை பகிஷ்கரிக்க
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அப்பொழுது கதர், இன்னும்
அதற்குரிய     ஸ்தானத்தை அடைந்துவிடவில்லை. ஹஸரத் சாகிப்
ஒப்புக்கொண்டு          விடக்கூடிய தீர்மானமன்று இது. கிலாபத்
விஷயத்தில் நீதி மறுக்கப்படுமானால்,    பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்
மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர் நோக்கம்.
ஆகையால்,   முடிந்தவரையில் பிரிட்டிஷ் சாமான்களை மாத்திரமே
பகிஷ்கரிக்க வேண்டும் என்றுபோட்டித்   தீர்மானம் ஒன்றை அவர்
கொண்டு வந்தார். அந்தக் கொள்கையே  தவறானது என்றும், அது
அனுபவ     சாத்தியமில்லை என்றும் கூறி நான் அத்தீர்மானத்தை
எதிர்த்தேன். நான்     அப்பொழுது கூறிய வாதங்கள் இப்பொழுது
எல்லோருக்கும் தெரிந்தவை.        அகிம்சையைப்  பற்றிய என்
கருத்துக்களையும் மகாநாட்டில் கூறினேன், நான்  கூறிய வாதங்கள்
கூட்டத்தில் இருந்தோரின்       உள்ளங்களை மிகவும் கவர்ந்தன
என்பதைக் கண்டேன்.      எனக்கு முன்னால் ஹஸரத் மோகானி
பேசினார். அவருடைய பேச்சுக்கு          பலத்த ஆரவாரமான
வரவேற்புகள்           இருந்ததால் என் பேச்சு எடுபடாமலேயே
போய்விடுமோ என்று    அஞ்சினேன். என் கருத்தை மகாநாட்டின்
முன் கூறாது போனால், கடமையில் தவறியவனாவேன் என்று நான்
கருதியதனாலேயே பேசத்துணிந்தேன். ஆனால், அங்கிருந்தவர்கள்
என் பிரசங்கத்தை அதிகக் கவனமாகக் கேட்டதோடு,  மேடையில்
இருந்தவர்கள் அதற்கு     முழு ஆதரவையும் அளித்தது எனக்கு
வியப்பும் ஆச்சரியமுமாக இருந்தது. ஒருவர் பின் ஒருவராகப் பலர்
எழுந்து என் கருத்தை      ஆதரித்துப் பேசினார்கள். பிரிட்டிஷ்
சாமான்களை மாத்திரம் பகிஷ்கரிப்பது   என்றால், அந்த நோக்கம்
நிறைவேறாது       போவதோடு,   தாங்கள்        நகைப்புக்கு
இடமானவர்களாகவும் ஆகி விடநேரும்   என்பதைத் தலைவர்கள்
காணமுடிந்தது. பிரிட்டிஷ் சாமான்       ஏதாவது ஒன்றேனும் தம்
உடம்பில் இல்லாதவர் ஒருவர்கூட அம்-