பக்கம் எண் :

கூச்சமே எனது பாதுகாப்பு73

Untitled Document
சீர்திருத்தமும்     சைவ உணவாளர்   சங்கத்தின் நோக்கம் என்பது
அவருடைய        அபிப்பிராயம்.   டாக்டர் அல்லின்ஸன் போன்ற
ஒழுக்கத்திற்கு விரோதமான  கருத்துள்ளவர்களைச் சங்கத்தில் இருக்க
அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் எண்ணினார்.   ஆகவே, அவரை
நீக்கிவிட ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.     இவ்விஷயம் என்
கவனத்தை அதிகமாகக் கவர்ந்தது.      கர்ப்பத்தடைக்குச் செயற்கை
முறைகளை         அனுசரிப்பதைப் பற்றி    டாக்டர் அல்லின்ஸன்
கொண்டிருந்த கருத்து      ஆபத்தானது என்றே நானும் கருதினேன்.
ஒழுக்க நெறியைக்        கடைப்பிடிப்பவர் என்ற வகையில் டாக்டர்
அல்லின்ஸனை எதிர்க்க      ஸ்ரீ ஹில்ஸு க்கு உரிமை உண்டு என்று
நானும் கருதினேன். அதோடு ஸ்ரீ ஹில்ஸிடமும்,   அவருடைய உதார
குணத்தினிடமும் எனக்கு அதிக மதிப்பு இருந்தது. ஆனால்  ஒழுக்கக்
கொள்கைகளும், சைவ உணவாளர்  சங்கத்தின் நோக்கங்களில் ஒன்று
என்று ஒப்புக்கொள்ள     ஒருவர் மறுக்கிறார் என்பதற்காக, அவரை
அச்சங்கத்திலிருந்து நீக்கிவிடுவதென்பது சரியானதல்ல  என்றும் நான்
எண்ணினேன்.      ஒழுக்கக் கொள்கைக்கு     எதிரானவர்களைச்
சங்கத்திலிருந்து விலக்கிவிட வேண்டும் என்ற  ஸ்ரீ ஹில்ஸின் கருத்து,
அவருடைய சொந்த      அபிப்பிராயமே.    சங்கத்தின் தெளிவான
கொள்கைக்கும் இதற்கும்        எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
சங்கத்தின்     நோக்கம்    சைவ        உணவுக் கொள்கையைப்
பரப்புவதேயன்றி எந்த     ஒழுக்க முறையையும்     பரப்புவதன்று.
ஆகையால், மற்ற ஒழுக்கங்களைப் பொறுத்தவரையில் ஒருவர் என்ன
கருத்துக்    கொண்டிருந்தாலும்,  சைவ உணவு மாத்திரமே சாப்பிடும்
யாரும்    இச்சங்கத்தில்    அங்கத்தினராக இருக்கலாம் என்று நான்
அபிப்பிராயப்பட்டேன்.

     என்னைப் போன்ற    அபிப்பிராயம் கொண்ட மற்றும் சிலரும்
கமிட்டியில் இருந்தனர்.   ஆயினும் என் சொந்த அபிப்பிராயத்தைக்
கூறிவிட     வேண்டியது என்னைப் பொறுத்தவரையில் என் கடமை
என்று உணர்ந்தேன்.   அதை எப்படிச்      செய்வது என்பதுதான்
பிரச்னை. கூட்டத்தில் பேசும் தைரியம் எனக்கு இல்லை. ஆகையால்
என்     எண்ணங்களையெல்லாம்     எழுதிவிடுவது என்று முடிவு
செய்தேன்.   அவ்வாறே எழுதி,   என்        சட்டைப் பைக்குள்
வைத்துக்கொண்டு    கூட்டத்திற்குப் போனேன்.  ஆனால்,  எழுதி
வைத்திருந்ததைப் படிக்கும் துணிவுகூட எனக்கு  வரவில்லை என்றே
எனக்கு ஞாபகம்.     தலைவர் வேறொருவரைக்  கொண்டு அதைக்
கூட்டத்தில் படிக்கச் செய்தார்.   முடிவில் டாக்டர்  அல்லின்ஸனின்
கட்சி        தோற்றுப் போயிற்று.  இவ்விதம் இது போன்ற  முதல்
போராட்டத்திலேயே      தோற்கும் கட்சியில் சேர்ந்தவனாக  நான்
இருந்ததைக் கண்டேன். என்றாலும் என் கட்சி  நியாயமானது என்ற
திருப்தி எனக்கு இருந்தது.    இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தக்