பக்கம் எண் :

கூச்சமே எனது பாதுகாப்பு75

Untitled Document
ஏற்பாடு          செய்தேன்.   இப்புதிய     பரீட்சையை  சைவச்
சாப்பாட்டுக்காரர்கள்    சந்தோஷமாகப்          பாராட்டினார்கள்.
விருந்துகளெல்லாம் இன்பத்திற்காகவே வைக்கப்படுகின்றன. ஆனால்,
மேலை    நாடுகளிலோ,  விருந்தையும்        ஓர் அருங்கலையாக
வளர்த்திருக்கிறார்கள். அங்கே      விருந்துகள்   ஆடம்பரமாகவும்,
சங்கீதம், பிரசங்கங்கள்     ஆகியவைகளுடனும் நடத்தப்படுகின்றன.
நான் நடத்திய அச்சிறிய விருந்திலும்  இந்த ஆடம்பரங்கள் இல்லாது
போகவில்லை. ஆகையால்,  அதில்  பிரசங்கங்களும்      இருந்தாக
வேண்டியதாயிற்று.    நான்    பேசவேண்டிய    சமயம் வந்தபோது
பேசுவதற்கு எழுந்து நின்றேன்.   சில    வாக்கியங்களை மாத்திரமே
கொண்ட ஒரு   சிறு பிரசங்கம் செய்வதென்று அதற்காக யோசித்தும்
வைத்திருந்தேன்.   ஆனால்,  முதல்    வாக்கியம்    பேசிய பிறகு
மேற்கொண்டு     பேச்சு வரவே இல்லை.  பார்லிமெண்டு  காமன்ஸ்
சபையில் அடிஸன் செய்ய முயன்ற    முதல் பிரசங்கத்தைக் குறித்து
நான் படித்திருக்கிறேன்.    ‘நான் கருதுகிறேன் (I Conceive)’ என்று
மும்முறை       திரும்பத் திரும்ப அவர் சொன்னார். அதற்கு மேல்
அவரால் பேச முடியவில்லை. அப்பொழுது ஒரு கேலிக்காரர் எழுந்து
‘இக்கனவான் மும்முறை கருத்தரித்தார். ஆனால், எதுவுமே வெளியே
வரவில்லை’ என்று சொன்னார். இந்த வரலாற்றை வைத்துக் கொண்டு
தமாஷ் பிரசங்கம்      ஒன்றைச் செய்துவிடுவது என்று   யோசித்து
வைத்திருந்தேன். ஆகையால், அக்கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.
முதலிலேயே தடைப்பட்டு என் பேச்சு நின்றுவிட்டது. எனக்கு ஞாபக
சக்தி அடியோடு இல்லாது போய்விட்டது.      தாமாஷான பிரசங்கம்
ஒன்று      செய்ய முயன்று,   என்னையே      கேலிக்கு இடமாக
ஆக்கிக்கொண்டேன். ‘கனவான்களே,    என் அழைப்பிற்கு இணங்கி
வந்ததற்காக உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’
என்று மாத்திரம் சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டேன்.

     தென்னாப்பிரிக்காவில்தான்      இந்தக்     கூச்சம் என்னை
விட்டுப்போயிற்று.       என்றாலும்,   அங்கும்    அது   முற்றும்
போய்விடவில்லை. முன்னால் தயார் செய்து  கொள்ளாமல் பிரசங்கம்
செய்வதென்பதும் என்னால் முடியாது.      முன்பின் தெரியாத ஒரு
கூட்டத்தின் முன்னால் பேசுவதற்கு நான் தயங்கினேன்.   முடிந்தால்
பிரசங்கம் செய்யாமலும் தப்பித்துக் கொண்டு விடுவேன். இன்றும்கூட
நண்பர்களின் கூட்டத்தில்     வெறும் பேச்சுப் பேசிக்கொண்டிருக்க
என்னால்      முடியும் என்று   நான் நினைக்கவில்லை ; அப்படிச்
செய்யவும் மாட்டேன்.

     ஆனால், இன்னும்   ஒன்றையும் நான் சொல்லவே வேண்டும்.
என்   உடம்புடன் ஒட்டியதாயிருந்த கூச்சத்தினால் சில சமயங்களில்
என்னைக் குறித்துப் பிறர் நகைப்பதற்கு இடம் வைத்துக்