பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்131

கருவறையில் பெருமாள் வாசுதேவர், ஸ்ரீதேவியுடனும்
பூதேவியுடனும் காட்சி தருகிறார். ஸ்ரீஇராஜகோபால சுவாமி
உற்சவ மூர்த்தியாகும். செண்பகவல்லித் தாயாரின் சந்நிதி
இங்கு உள்ளது. நம்மாழ்வார், மணவாள மாமுனிகள்
ஆகியோரின் பாடல்களை இக்கோவில் பெற்றுள்ளது.
‘தென்னாட்டின் துவாரகா’ என்ற சிறப்புப் பெயரும்
இக்கோவிலுக்கு உண்டு.

ஒவ்வோராண்டும் பங்குனி மாதம் நடைபெறும்
‘பிரமோத்சவம்’ இக்கோவிலின் சிறப்புமிக்க விழாவாகும்.

இவ்வூரிலுள்ள ஜெயங்கொண்டநாதர் கோவிலும்
இராஜராஜேஸ்வரர் கோவிலும்
தஞ்சைச் சோழ மன்னர்
முதலாம் இராஜாதி இராஜனால் (1018 - 53)
தோற்றுவிக்கப்பட்டதாகும்.

இவ்வூரில் சமணத் தீர்த்தங்கரருக்கான ஒரு கோவிலும்
உள்ளது.