பக்கம் எண் :

132தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

14. தஞ்சாவூர்

தமிழ்நாட்டின் ‘தானியக் களஞ்சியம்’ எனப்படும்
தஞ்சை மாவட்டத்தின் தலைமையிடம் தஞ்சாவூர் ஆகும்.
தஞ்சாவூர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரம் ஆகும்.
இந்நகர்ப்பகுதி சங்க காலத்தில் சோழ மன்னர்களின்
ஆட்சியிலிருந்தது. கி.பி. 6ஆம் நூற்றாண்டுமுதல்
கி.பி. சுமார் 850வரை முத்தரையர்கள் என்ற குறுநில மன்னர்கள்
தஞ்சைப் பகுதியை ஆட்சி புரிந்தனர். கி.பி. 850இல்
தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து விஜயாலயன் கைப்பற்றித்
தஞ்சைச் சோழர் ஆட்சியைத் தோற்றுவித்தார். பிற்காலச்
சோழர்களின் தலைநகராகத் தஞ்சாவூர் திகழ்ந்தது.
இராஜராஜசோழன்
ஆட்சிக் காலத்தில் (985-1014) தஞ்சாவூர்
நகர் மிக்க புகழ் எய்தியது. இராஜராஜ சோழனின் மகனரான
இராசேந்திர சோழன் கி.பி. சுமார் 1025இல் தனது கலைநகரைத்
தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார்.
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் பாண்டிய
மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விஜயநகர அரசின்
ஆட்சிக்குட்பட்டது.

கி.பி. 1532இல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின்
ஆட்சி தொடங்கிற்று. செவப்பன், தஞ்சையை ஆண்ட
முதல் நாயக்க மன்னர் ஆவார். செவப்பரையடுத்து
அச்சுதப்பன், இரகுநாதன் விஜயராகவன்
ஆகிய நாயக்க
மன்னர்கள் தஞ்சையை ஆட்சி புரிந்தனர். தஞ்சை
நாயக்க மன்னர்களுள் புகழ்மிக்கவராக இரகுநாதரைக்

கருதலாம்.

திருச்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த
மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் கி.பி. 1673இல்
தஞ்சாவூர்மீது படையெடுத்தார். இப்போரில் விஜயராகவன்
தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். தஞ்சை
அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது. மதுரை
நாயக்க அரசின் பிரதிநிதியாக அழகிரி என்பவர் ஆட்சி
புரிந்தார். ஆனால், பீஜப்பூர் சுல்தான் உதவியுடன்
செங்கமலதாஸ்
என்பவர் அரியணையில் அமர்த்தப்பட்டார்.
பீஜப்பூரின் மராட்டிய