பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்133

தளபதியும், மராட்டிய அரசை நிறுவிய சிவாஜியின்
சகோதரருமான வெங்காஜி (எகோஜி) தமது
திறமையினால், செங்கமலதாசைப் பதவியிலிருந்து அகற்றி
(1676) தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை ஏற்படுத்தினார்.
வெங்காஜியைத் தொடர்ந்து ஷாஜி, முதலாம் சரபோஜி,
துக்கோஜி, பாபாசாகிப் பிரதாப்சிங், துல்ஜாஜி அமர்சிங்,
இரண்டாம் சரபோஜி
ஆகிய மராட்டிய மன்னர்கள் தஞ்சையை
ஆட்சி புரிந்தனர்.

பிரதாப்சிங் ஆட்சிக் காலத்தில் (1739-1763) தஞ்சாவூர்
சந்தாசாகிப் மற்றும் பிரெஞ்சு மராட்டியப் படைகளின்
தாக்குதல்களுக்கு (1749, 1754, 1758) உட்பட்டது. தஞ்சையை
ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்
இரண்டாம் சரபோஜி (1798-1832) ஆவார். ஆனால், இவர்
ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்வெஸ்லி பிரபுவுடன்
கி.பி. 1799இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சாவூர்க்
கோட்டையை மட்டும் இவர் தம் வசம் வைத்துக்கொள்ளவும்
மீதமுள்ள தஞ்சாவூர் அரசின் பகுதிகளின் நிர்வாகத்தை
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கொடுக்கவும்
ஒப்புக்கொள்ளப்பட்டது. இரண்டாம் சரபோஜி மன்னரின்
புகழுக்குக் காரணம் இவர் கலை, இலக்கிய வளர்ச்சிக்குக்
காட்டிய ஆதரவே ஆகும். இவர் பல அரிய நூல்களைச்
சேகரித்தார், இசைக்கலைக்கு ஆதரவு கொடுத்தார். தஞ்சைப்
பெருங் கோவிலில் பல திருப்பணிகளை மேற்கொண்டார்.
ஆங்கிலேயரின் சிறந்த நண்பராக விளங்கினார்,
இரண்டாம்சரபோஜி மன்னருக்குப்பின் அவர் மகன் இரண்டாம்
சிவாஜி (1832-1855) ஆட்சிக்கு வந்தார். தஞ்சையின் கடைசி
மராட்டிய மன்னர் இவரே. இவர் ஆண்வாரிசு இன்றி இறந்த
பின் (1855) கவர்னர் ஜெனரல் டல்ஹௌசி பிரபு
அவகாசியிலிக் கொள்கையைப் பயன்படுத்தித் தஞ்சையில்
மராட்டிய மன்னர் பதவியை நீக்கினார். தஞ்சாவூர்க் கோட்டை
நீக்கிய மீதிப் பகுதிகளைக் கி.பி. 1799இல் தங்கள்
ஆட்சிக்குட்படுத்திய ஆங்கிலேயர்கள் கி.பி. 1856இல்
தஞ்சாவூர் கோட்டையையும் தங்கள் ஆட்சியின் கீழ்
கொண்டு வந்தனர்.

தஞ்சாவூர் 1866ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து
வருகிறது. 1981ஆம் வருடக் கணக்குப்படி இந்நகரின் மக்கள்