பக்கம் எண் :

134தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

தொகை 1,83,464 ஆகும். இந்நாளில் இந்நகர் தஞ்சாவூர்
மாவட்டத்தின் தலைமையிடமாக விளங்குகிறது.

பின் வரும் பகுதியில் தஞ்சாவூரிலுள்ள நமது
பண்பாட்டின் சிறப்புக்குரிய சின்னங்கள்பற்றிக் காணலாம்.

பிரகதீஸ்வரர் ஆலயம்

தஞ்சாவூர் நகரின் பெருமைக்குக் காரணமாக இருப்பது
இங்குள்ள பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார் ஆலயம்
ஆகும். தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு சோழப் பேரரசை
ஆட்சி புரிந்த இராஜராஜன் (985-1014) ஒரு சிறந்த சிவபக்தனாக
விளங்கினார். இவர் தமது தலைநகரில் வரலாறு கண்டிராத
ஒரு மாபெரும் சிவாலயத்தை ஏழுப்பினார். கல்வெட்டுகள்
இவ்வாலயத்தை இராஜராஜேச்சுரம் என்று குறிப்பிட்டுள்ளன.
இவ்வாலயம் கி.பி. 1003இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு
கி.பி. 1010இல் கட்டி முடிக்கப்பட்டது. இராஜராஜனின்
25ஆம் ஆண்டு ஆட்சியில் (985-1010) இவ்வாலயம்
பூசனைக்குரியதாகச் செய்யப்பட்டது. இவ்வாலயத்தின்
சிறப்புப்பற்றி இனிக் காண்போம்.

1. கட்டுமானக் கற்கோவில்களில் இந்தியாவிலேயே
மிகப்பெரிய கோவில் இராஜராஜேச்சுரம் ஆகும். இது
அஸ்திவாரம்முதல் விமானத்தின் ஸ்தூபிவரை கருங்கற்களாலாகிய,
ஒரு மாபெரும் ‘கற்கோவிலாகும்’. நிலப்பரப்புக்கு மேல்
உயர்ந்த கல்மேடை (அதிட்டானம்) மீது இவ்வாலயம்
நிறுவப்பட்டுள்ளது. சுற்று வட்டாரங்களில் எங்கும் கருங்கல்
பாறையைப் பார்க்க முடியாத ஒரு ஊரில் (தஞ்சையில்)
நெடுந்தூரத்திலிருந்து மிகப் பெரிய கருங்கற்களைக் கொண்டு
வந்து, இக்கற்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை நிர்மாணிப்பதில்
ஈடுபட்ட மன்னர், சிற்பி மற்றும் இதர மக்களின் இறைபணி
போற்றுதற்குரியது.

2. பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தனிச்சிறப்பு இங்குள்ள
விமானம்
ஆகும். (இறைவனின் கருவறைமீது எழுப்பப்படும்
உயரிய கட்டடம் ‘விமானம்’ எனப்படும். கோவிலின் நுழை
வாயிலில் எழுப்பப்படும் உயரிய கட்டடம் ‘கோபுரம்’
எனப்படும்.) கருவறையின் அதிட்டானம்முதல்
கலசப்பகுதிவரை இவ்விமானத்தின் உயரம் 61 மீட்டர் ஆகும்.
கலசப்பகுதி