பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்135

நீங்கலாக விமானம் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டதாகும்.
சதுர வடிவத்தில், 13 நிலைகளுடன் மிக்க உயரத்தில் அழகுற
அமைக்கப்பட்டுள்ள ‘இவ்விமானத்திற்கு ஈடு இணை எதுவும்
இல்லை எனலாம்!
இந்த விமானம் இறைவன் (பெருவுடையார்)
இருக்கும் கருவறையின்மேல் கட்டப்பட்டுள்ளது. விமானத்தின்
சிகரத்தை பிரமரந்திரத் தளக்கல்லும், எண்கோண வடிவமுள்ள
ஸ்தூபியும் அழகுபடுத்துகின்றன. பிரமரந்திரத் தளக்கல்
81.3 டன் எடையுள்ள ஒரே கல் ஆகும். இப்பெரிய கல்லை
விமானத்தின் உச்சியில் ஏற்றுவதற்குத் தஞ்சாவூரிலிருந்து
சுமார் 6 கி.மீ. தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்ற
கிராமத்திலிருந்து சாய்தளம் (சாரம்) அமைத்தார்களாம்!
இராஜராஜன் தஞ்சைக் கோவிலில் அமைத்த விமானம்
தமிழ் மக்கள் பண்பாட்டின் பெருமையை உலகிற்குக் கூறும்
ஒரு உன்னதச் சின்னம் ஆகும். மேலே ஏற்றிவைக்கப்பட்டுள்ள
பெருங்கல்லினால் கீழே விழாமல் இக்கோவில் பணியப்பட்டுள்ளது.
உள் நாட்டினரும், வெளி நாட்டினரும் வியக்கும் வண்ணம்
கலைத்திறனையும், நுண்ணறிவையும் பொறியியல் திறனையும்
அன்றைய சிற்பிகள் பெற்றிருந்தனர்.

3. விமானத்தின் கீழ் நிலையிலுள்ள சுவர்களின் தேவ;
கோட்டங்களில் சிவன், விஷ்ணு, துர்க்கை, கணேசர்,
பிட்சாடனர், வீரபத்திரர், தஷிணாமூர்த்தி, விஷ்ணு
அனுக்கிரக மூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், கங்காதரர்

ஆகிய தெய்வங்களின் அழகிய திருவுருவங்கள் உள்ளன.
இத்திருவுருவங்கள் யாவும் உன்னதக் கலைப்படைப்புகள் ஆகும்.

4. இறைவன் சந்நிதியின் நுழைவாயிலிலுள்ள
துவாரபாலர்கள் சிற்பங்கள் ஒரே கல்லினாலானவை.
5.5 மீட்டர் உயரமுள்ளவை. வெண்கலம் போன்ற திண்ணியக்
கருங்கல்லால் இவை அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

5. கருவறையில் இறைவர் (சிவபெருமான்) லிங்க வடிவில்
காட்சி தருகிறார். (சிவனை லிங்க வடிவில் வழிபடுதல் மரபாகும்)
கருவறை விங்கம் அளவில் மிகவும் பெரியது. இந்த லிங்கத்தைக
கருவறையில் நிறுவ இராஜராஜனின் குருவான கருவூர்த் தேவர்
உதவினார் என்று கூறப்படுகிறது. (இச்செய்திகளில் சில கருவூர்த்
தேவர் இயற்றிய பாக்களில்