பக்கம் எண் :

136தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

உள்ளன.) தஞ்சைக் கோவிலில் கருவூராருக்கு ஒரு சந்நிதி
உள்ளது.

6. இறைவன் கருவறையின் மேல்தளத்தின் சுவர்களில்
பரதநாட்டிய சாஸ்திரக் கரணவகைகள் 108 இல் 81 கரணங்கள்
வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ளன. (சிதம்பரம் நடராசர்
கோவில் கோபுரத்திலும், கும்பகோணம் சாரங்கபாணி
கோவிலிலும் பரதநாட்டியக் கலையின் 108 வகைக் கரணங்களை
விளக்கும் சிற்பங்களைக் காணலாம்.) இச்சிற்பங்கள் நமது அரிய
கலைச்செல்வங்களாகும்.

7. இறைவன் கருவறையைச் சுற்றியுள்ள உண்ணாழியின்
இருபுறச் சுவர்களிலும் சோழர்கால வண்ண ஓவியங்கள்
உள்ளன. புராணங்களிலிருந்தும். சமயக் கதைகளிலிருந்தும்
பல சம்பவங்களும், கருத்துகளும் இவ்வண்ண ஓவியங்களில்
இடம் பெறுகின்றன. சுந்தரமூர்த்தி அடிகளின் தடுத்தாட்கொண்ட
கதை
இராஜராஜன் தன் குரு கருவூர்த் தேவருடன் காணப்படுவது,
நடனமாது ஓவியம், இராஜராஜன் தேவியருடன் தில்லை
நடராசரை வணங்குவது ஆகிய ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை
ஆகும். தஞ்சைக் கோவிலிலுள்ள சோழர் கால ஓவியங்களை
முதலில் அறிந்தவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப்
பேராசிரியராகப் பணியாற்றிய கோவிந்தசாமி ஆவார்.

கருவறையின் மேல்தளத்தின் சுவர்களில் காணப்படும்
பரதநாட்டிய சாஸ்திரக் கரணவகைகளின் எழில்மிகு தோற்றம்
உண்ணாழியின் சுவர்களில் காணப்படும் ஓவியங்கள் ஆகியவை
கலைச்சிறப்பு மிக்கவை. இவற்றைக் காண கருவறைலிங்கம்
அருகிலுள்ள வாயில்வழியாகச் செல்லலாம் அல்லது
வெளிப்புறமாக உயரமான ஏணிப்படிகள்மீது ஏறியும்
இவற்றைக் காணலாம். (இவற்றைக் காண இந்தியத்
தொல்பொருள் துறையினரின் அனுமதி பெற வேண்டியுள்ளது.)

இராஜராஜன் அமைத்த தஞ்சைப் பெருவுடையார்
கோவில் ஒரு ஒப்பற்றக் கலைக் கோவிலாகும். கட்டுமானம்,
சிற்பம், கட்டடம், படிமக்கலை, ஓவியக்கலை இவற்றின்
ஒருமித்த கருவூலமாக இக்கற்றளி விளங்குகிறது. இராஜராஜனின்