என்று அழைக்கப்பட்டது என்றும் கூறுவர்.) சங்க இலக்கியம்
குறிப்பிடும் ‘பொதினி’ இன்றைய பழனியேயாகும்.
பழனி முருகன் கோவிலின் அமைப்பும் வரலாறும்
திரு ஆவினன் குடிக் கோவில்
திரு ஆவினன் குடிக் கோவில் என்பது பழனியின்
ஆதிக் கோவிலாகும். சங்ககாலப் புலவரான நக்கீரர் தமது
‘திருமுருகாற்றுப்படை’யில் முருகனின் மூன்றாவது படை வீடாகத்
திரு ஆவினன் குடியைப் போற்றியுள்ளார். இக்கோவிலில்
முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து குழந்தை வேலாயுத
சவாமி என்ற பெயருடன் விளங்குகிறார். திரு ஆவினன் குடி
முருகனைத் தரிசித்து நன்மை பெறத் தேவர்களும் முனிவர்களும்
வருவதாகத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார்.
மிக்க பழமைமிக்க இக்கோவிலை கி.பி. 1898இல் நாட்டுக்கோட்டை
நகரத்தார்கள் புதுப்பித்துக் கட்டினர். இக்கோவிலின் கோபுரம்
கி.பி. 1968இல் நாட்டுக் கோட்டை நகரத்தார்களால்
அமைக்கப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. சந்நிதி
முன்னுள்ள மண்டபத் தூண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை.
சந்நிதி முன்னுள்ள மண்டபத்தின் கூரைப் பகுதியில் காணப்படும்
கல்வளையங்கள் இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு
எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
மலைக்கோவில் பழனிமலை 137 மீட்டர் உயரம் உள்ளது. இம்மலையின்
உச்சியில் தமிழ்த்தெய்வமாம் முருகன் தண்டாயுதபாணி
சுவாமியாக வீற்றிருக்கிறார். பழனிமலைக் கோவில் கால
வரையறைக்கு உட்படாத பழம்பெரும் கோவிலாக உள்ளது.
போகர் என்ற சித்தர் கருவறையிலுள்ள இறைவன் திருவுருவத்தை
ஒன்பது வகைப் பாஷாணத்தை ஒன்றுகூட்டி அமைத்து
மலைக்கோவிலை உண்டாக்கினார் என்று கூறுவர். இப்போக,
சித்தரின் சமாதி மலை உச்சியில் முருகன் சந்நிதியின் தென்மேற்கு
மூலையில் உள்ளது. போகருக்குப் பின் அவரது சீடர்
புலிப்பாணியும், அவருக்குப் பின் அவர் மரபில்
|