அமைக்கப்பட்டதாகும். சமீப காலத்தில் பல பக்தர்களின
நன்கொடைகளினால் பல கட்டடப் பகுதிகள் எழுந்துள்ளன.
அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்லக் கி.பி. 1925க்குப்
பின் செம்மையான மலைப்படிகள் அமைக்கப்பட்டன.
இக்கோவிலின் மிகச்சிறந்த குடமுழுக்கு விழா 1973ஆம்
ஆண்டு நடைபெற்றது. கோவிந்தசாமி நாயுடு என்பவரின்
நன்கொடையால், 1975ஆம் ஆண்டு கார்த்திகை
மண்டபமும், கவுண்டப்ப கவுண்டர் என்பவர்
நன்கொடையால் 1979ஆம்ஆண்டு வசந்த மண்டபமும்
மலை உச்சியில் கட்டி முடிக்கப்பட்டன.இந்துப் பண்பாட்டின் ஓரு முக்கிய சின்னமாக
விளங்கும் பழனிமலைக் கோவிலின் சிறப்புமிக்க அம்சங்கள்
பின்வருவனவாகும்: 1. முருகப்பெருமான் தமிழ்நாட்டு மக்களின் முக்கிய
தெய்வமாகும். தமிழ்நாட்டிலுள்ள முருகனது கோவில்கள்
யாவற்றிலும் புகழ் பெற்றதாகப் பழனி முருகன் கோவில் உள்ளது. 2. கருவறையில் முருகப்பெருமான் ஆண்டிக் கோலத்தில்
எழுந்தருளியுள்ளார். தனது வலது கையில் தண்டம்
பிடித்திருப்பதால் தண்டாயுதபாணி சுவாமி என்
அழைக்கப்படுகிறார். 3. பங்குனி மாத
உத்திர விழாவின்பொழுது பல
இலட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை
தருகின்றனர். கார்த்திகை விழா, கந்தர்சஷ்டி விழா, தைப்பூச
விழா ஆகியவை இதர முக்கிய வழா நாள்களாகும். திருமணம்,
நேர்த்திக்கடன் செலுத்துதல், தலைமுடி எடுத்தல், காது குத்துதல்
முதலிய மங்கள காரியங்களுக்காக மக்கள் தினமும் வருவதால்
பழனியில் தினமும் விழக்கோலம் உள்ளது எனலாம். 4.கேரள மன்னன் சேரமான் பெருமாள் இக்கோவிலின்
திருப்பணியில் ஈடுபட்டிருந்ததாலும், கருவறையிலிருக்கும்
முருகன், மலைவாழ் தெய்வமாக இருப்பதாலும், அத்தெய்வம்
|