|
கலைச் சிறப்பு 1. தண்டபாணி சுவாமியின் கருவறை முற்றிலும்
கல்லினாலானது. கருவறையின் கருங்கல் வேலைப்பாடுகள்
அழகு மிக்கவை. 2. மலைமீது ஏராளமான தூண்களைக் கொண்டுவந்து
மண்டபம் அமைத்திருப்பது சிறப்புமிக்கதாகும். நாயக்கர்
மண்டபத்தின் ஒரு பகுதியிலுள்ள சுப்பிரமணிய விநாயகர்
சந்நிதி கல் வேலைப்பாடுமிக்கது. 3. பார வேல் மண்டபத்தில் ஒற்றைக் கல்லினாலான சில
தூண் சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது பீமசேனன்
புருசா மிருகத்துடன் போராடும் காட்சியைக் கொண்ட
தூண்களாகும். 4. பாதவிநாயகர் கோவிலையடுத்து மலைப்பாதைப்
படிகள் தொடங்குமிடத்திலுள்ள P.S.G. மங்கம்மாள் மண்டபத்தில்
பல தெய்வங்களின் திருவுருவங்கள் அழகுடன் காட்சியளிக்கின்றன.5. மலை உச்சியில் கிழக்கு வெளிப்பிரகாரத்தில் புதிதாக
அமைக்கப்பட்டுள்ள கார்த்திகை மண்டபம், வசந்த மண்டபம்
ஆகியவற்றில் உள்ள தெய்வங்களின் வண்ணச் சுதைச் சிற்பங்கள்
அழகுமிக்கவை. இவை மதுரைச்சிற்பி மாரியப்ப ஸ்தபதியால்
உருவாக்கப் பெற்றவையாகும். 6. அடிவாரத்தில் பாதவிநாயகர் கோவிலுக்கு வடமேற்கில்
உள்ள மீனாட்சி கோவிலின் தூண்களும், யாளிகளும் சிற்ப
வேலைப்பாடுமிக்கவை. இக்கோவிலின் சந்நிதி முன்பாகப் பழனி
வைகாவூர் நாட்டை ஆண்ட பாளையக்காரர்கள், அவர்களின்
மனைவியர் ஆகியோரது உருவச் சிலைகள் சில உள்ளன.
பழனி நகரிலுள்ள இதர கோவில்கள் பட்டத்து விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில்,
வேணுகோபாலப் பெருமாள் கோவில், இலக்குமி நாராயணப்
பெருமாள் கோவில், இடும்பன் கோவில், பெரியநாயகி அம்மன்
|