பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்237

திருஞானசம்பந்தர் மடம்

தமிழ்நாட்டில் சைவ சமயத்திற்குச் சீரிய பணியாற்றி வரும்
மடங்களில் திருஞானசம்பந்தர் மடம் முக்கிய ஒன்றாகும். இது
மதுரை ஆதீனத்
தின் நிர்வாகத்திற்குட்பட்டதாகும். திருஞானசம்பந்தர்
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார். இவரது முயற்சியால்
மதுரைப் பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் சமண
சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார். மதுரைப் பகுதியில்
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சைவ சமயம் ஏற்றம் பெறக்
காரணமாயிருந்த திருஞான சம்பந்தர் மதுரை வரலாற்றில் ஒரு
சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளார். இன்றைய
திருஞானசம்பந்தர் மடத்தின் ஆதிப்பகுதி, திருஞான
சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். தற்பொழுது ஸ்ரீலஸ்ரீ
அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய
சுவாமிகள்
இம்மடத்தின் 292ஆவது குரு மகா சந்நிதானமாக
இருக்கிறார்.

மதுரை நகரிலுள்ள கிறித்தவ ஆலயங்கள் மதுரை நகரிலுள்ள
கிறித்தவ ஆலயங்களில் புனித ஜெபமாலை அன்னை ஆலயம்
உரோமன் கத்தோலிக்கச் சபையினருக்குரியதாகும். கி.பி. 17ஆம்
நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரையில் கத்தோலிக்கக் கிறித்தவ
சமயத்தைப் பரப்பிய இயேசு சங்கப் பாதிரியாரான இராபர்ட்-டி-
நொபிலி (1577-1656) இன்றைய புனித ஜெபமாலை அன்னை
ஆலயம் இருந்த பகுதியில் ஒரு குடிசையில் வாழ்ந்தார்.

கி.பி. 1606இல் மதுரைக்கு வந்த இப்பெரியார், புதிய
வழிகளைப் பின்பற்றி மதுரையில் கிறித்தவ சமயக்
கருத்துகளைப் பரப்பினார். மதுரையிலிருந்த அந்தணர் வகுப்பைச்
சேர்ந்த மக்களுடன் தொடர்புகொண்டார். தமிழ், தெலுங்கு,
சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்று மக்களுக்கு அவரவர்
தாய்மொழியிலே கிறித்தவ சமயத்தைப் போதித்தார். தமிழ்
மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றுப் பல உரைநடை நூல்களை
எழுதினார். ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என இவர் புகழப்
படுகிறார். ‘தத்துவ போத சுவாமி’ என்ற பெயரை இவர்