பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்241

மதுரை நகரில் வாழும் சமண சமய மக்கள் மதுரை நகரில்
இரு சிறு கோவில்களை அமைத்துள்ளனர். பார்சுவநாதர்
கோவில்
மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள ஜடாமுனி
கோவில் தெருவில் உள்ளது. சுமதிநாதர் கோவில், மீனாட்சி
அம்மன் கோவிலுக்கு அருகில் மீனாட்சி கோவில் தெருவில்
உள்ளது. பார்சுவநாதர் சமண சமயத்தின் 23ஆவது தீர்த்தங்கரர்
ஆவார். சுமதிநாதர் 5 ஆவது தீர்த்தங்கரர் ஆவார்.

திருமலை மன்னர் அரண்மனை

மதுரை நகரின் மத்தியில், விளக்குத்தூண் அருகில் திருமலை
மன்னர் அரண்மனை உள்ளது. இது ‘மஹால்’ எனப் பொதுவாக
அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து மதுரைக்குத் தமது
தலைநகரை மாற்றிய திருமலை மன்னர், மதுரையில்
கி.பி. 1634இல் ஒரு பெரிய அரண்மனையைக் கட்டினார்.
இவ்வரண்மனையின் சிறப்பான அம்சங்கள் பின்வருமாறு :

1. தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள பழைய அரண்மனைகளில்
மதுரைத் திருமலை மன்னர் அரண்மனை ஒன்றே மிகவும்
எழிலுடன் இன்று திகழ்கிறது.

2. தூண்கள் இவ்வரண்மனையின் மகத்தான கவர்ச்சியாகும்.
இங்கு மொத்தம் 248 தூண்கள் உள்ளன. உயரமான மேடைமீது
158 தூண்களும், தரைமீது 40 தூண்களும், உள்ளன.
நாடகசாலையிலும் அரண்மனையின் இதர பகுதிகளிலும் மற்ற
தூண்கள் உள்ளன. நான்கு பேராலும் நீட்டிப்பிடிக்கும் அளவிற்கு
சுமார் 5 மீட்டர் சுற்றளவினை இத்தூண்கள் கொண்டுள்ளன.
இத்தூண்கள் இவற்றைப் பார்வையிடுபவர்கள் அனைவரையும்
மெய்மறக்கச் செய்கின்றன. அமைப்பிலும், அழகிலும், மதுரை
திருமலை மன்னர் அரண்மனையின் தூண்கள் நமது இந்திய
நாட்டிலே இணையற்றவையாகப் பெருமிதத்துடன் விளங்குகின்றன.

3. அரண்மனையின் எப்பகுதியிலும் இரும்பு அல்லது
மரம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை! இரும்புக்கம்பி இல்லாமல்,
சாளரம் அமைக்காமல், குவிமாடங்கள், வளைவுகள் ஆகியவை
உருவாக்கப்பட்டிருப்பது வியப்பாக உள்ளது. செங்கல், கருங்கல்