வெண்சுதைச் சாந்து ஆகியவற்றால் இம்மாபெரும்
அரண்மனை
உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது.4.
திருமலை மன்னர் காலத்தில் இன்றுள்ளதைவிட
நான்கு மடங்கு பெரியதாக இந்த அரண்மனை இருந்ததாம். 5.
திருமலை மன்னர் காலத்துக் கட்டடக் கலைஞர்கள்
சமயத் தொடர்புடைய கட்டடங்களையும். சிற்பங்களையும்
உருவாக்குவதில் மட்டும் வல்லவர்களாக இல்லாமல்
சமயச்
சார்பற்ற கட்டடங்களையும் உருவாக்குவதில்
வல்லவர்கள்
என்பதற்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு திருமலை
மன்னரது
அரண்மனையாகும். 6.
மாநிலத் தொல்பொருள் துறையினரின் பணியினால்
இந்த அரண்மனை புதியது போன்று காட்சியளிக்கிறது. 1981ஆம்
ஆண்டு ஜனவரியில் இவ்வரண்மனையில் ‘ஒலி-ஒளிக்காட்சி’
தொடங்கப்பட்டது. திருமலை மன்னரின் வரலாறு
இப்புதுமையான
காட்சியில் இடம் பெறுகிறது. திருமலை
மன்னர் அரண்மனையைத் தவிர,
தமுக்கத்திலுள்ள மங்கம்மாள் மாளிகைக் கட்டடம்,
மத்திய
காய்கறிச் சந்தை அருகிலுள்ள மங்கம்மாள் மாளிகை, தெற்குச்
சித்திரை வீதி நாயக்கர் காலக் கட்டடங்கள், மத்திய பேருந்து
நிலையம் அருகிலுள்ள மேலவாசல் கோட்டைப்பகுதி, அம்மன்
சந்நிதி எதிரிலுள்ள விட்டவாசல் ஆகியவை மதுரை நகரிலுள்ள
சமயச் சார்பற்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க
கட்டடங்களாகும். அரசி மங்கம்மாவின் தமுக்கம் மாளிகை புதுப்பிக்கப்பட்டு
1959ஆம் ஆண்டு காந்தி நினைவு நிலையமும் காட்சிக்கூடமும்
அமைக்கப்பட்டன. மகாத்மா காந்தியின் நினைவாக
இந்தியாவில்
அமைக்கப்பட்டுள்ள காட்சிக்கூடங்களில் சிறப்பு மிக்கதும்,
முதன் முதலில் நிறுவப்பட்டதுமான பெருமைக்குரியது மதுரைக்
காந்தி நினைவு நிலையம் ஆகும். காந்தி நினைவு நிலைய
நூலகக் கட்டடத்தின் எதிரில் 1930ஆம் ஆண்டு நடந்த
வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தியாகிகளின்
நினைவாகப் பொன்விழா அரங்கமும் (1930-1980) காட்சிக்
கூடமும் 11-10-1980 அன்று திறக்கப்பட்டுள்ளது.
|