பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்243

அரசு காட்சிக் கூடம் : தமிழ்நாட்டின் மிகப் பெரிய
காட்சிக்கூடம் (Museum) சென்னை எழும்பூரில் உள்ளது.
சேலம் நகரில் ஒரு காட்சிக் கூடமும், புதுக்கோட்டை நகரில்
ஒரு காட்சிக் கூடமும் தமிழ்நாடு அரசைக் சேர்ந்ததாகும்.
இவை மாவட்ட காட்சிக்கூடம் எனப்படுகிறது. மதுரை நகரில்
ஜனவரி 1981இல் மாவட்ட காட்சிக்கூடம் அமைக்கப்பட்டது.
இது மாநிலத்தின் மூன்றாவது மாவட்ட காட்சிக் கூடமாகும்.
இக்காட்சிக் கூடம், காந்தி நினைவு நிலையத்திலுள்ள, உப்பு
சத்தியாக்கிரகப் பொன்விழா அரங்கத்தில் தற்பொழுது
அமைந்துள்ளது. தொல்பொருள் இயல், புவி இயல், நாணய
இயல், படிமக்கலை, ஓவியக்கலை முதலிய பல துறைகளில்
மதுரை மாவட்டத்திற்குரிய பல பொருள்கள் காட்சிக் கூடத்தில்
இடம் பெற்றுள்ளன.

மதுரை நகரை அடுத்துள்ள கோவில்கள்

மதுரை நகருக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றம், அழகர்
கோவில், நரசிங்கம், திருவாதவூர், திருவேடகம், திருப்புவனம்

ஆகிய ஊர்களில் மதுரையைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி
புரிந்த பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோரின்
திருப்பணிகளைக் கொண்டுள்ள இந்து சமயக் கோவில்கள்
உள்ளன. இவற்றைப்பற்றிய சிறு குறிப்புகளை இப்பகுதியில்
காணலாம்.

திருப்பரங்குன்றம்

மதுரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றம்
உள்ளது. திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி கோவில்
உள்ளது.

புராண அடிப்படையில் சிவபெருமானின் இரு
திருக்குமாரர்களில் மூத்தவர் கணேசராகவும், இளையவர்
முருகனாகவும் கருதப்படுகின்றனர். திருப்பரங்குன்றத்தில்
முருகப்பெருமான் தேவயானை அம்மையைத் திருமணம்
செய்தருளினார் என்று புராணம் கூறும். முருகனின் அறுபடை
வீடுகளில் திருப்பரங்