குன்றம் முதல் படைவீடாகக் கருதப்படுகிறது. பரிபாடல் என்ற
சங்க இலக்கியநூல் திருப்பரங்குன்றத்து முருகனைக்
குறிப்பிடுகின்றது.இன்று
நாம் காணும் சுப்ரமணியசுவாமியின் கருவறை
கி.பி.773இல் பராந்தக நெடுஞ்சடையன் (765-815) என்ற பாண்டிய
மன்னர் காலத்தில், அவரது தானைத் தலைவன், சாத்தன்
கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில்
என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. மதுரை நாயக்க
மன்னர்களில் வீரப்பர் (1572-1595), திருமலை மன்னர்
(1623-1659) ஆகியோர் திருப்பணிகளும், அரசி மங்கம்மாள்
(1689-1706) திருப்பணிகளும் இக்கோவிலில் உள்ளன.
கலைச்சிறப்பு திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை
ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள்
மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி
சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர்
சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள்
சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன. ஐந்து குகைச் சந்நிதிகளி லும் காணப்படும்
தெய்வங்களின் உருவங்கள் இவற்றுடன் காணப்படும் இதர சிற்ப உருவங்கள் யாவும்
உன்னதக்
கலைப்படைப்புகள் ஆகும். திருப்பரங்குன்றத்திலுள்ள
குகைக் கோவிலைப்போல்
தமிழ்நாட்டில் நாமக்கல், குன்றக்குடி. திருமயம்,
திருக்கோகர்ணம், குடுமியான்மலை முதலிய இடங்களிலும்
குகைக் கோவில்கள் உள்ளன. இருப்பினும் திருப்பரங்குன்ற
சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறையிலுள்ள குகைச்
சிற்பங்கள் விசேடச் சிறப்பைப் பெற்றுள்ளன எனலாம்,
மலைப்பாறையில் மிகப்பெரிய அளவில் வடிக்கப்பட்டுள்ள
தெய்வங்களின் காட்சி நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.
சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின்
உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்புகளும், இதர சிற்ப
அம்சங்களும் வியக்கத்தக்கனவாக உள்ளன. திருப்பரங்குன்றக்
கோவிலின் கருவறையை ஓர்
|