பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்245

ஒப்பற்ற கலைக்கருவூலம் எனலாம். பாண்டியர் காலச் சிற்பக்
கலைத்திறனுக்கு உறைவிடமாக இக்கருவறை விளங்குகிறது.

மேற்கூறிய ஐந்து சந்நிதிகளைத் தவிர திருப்பரங்குன்றக்
கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா
தேவிக்கான குகைக் கோவிலும்
உள்ளன. இவை யாவும்
அற்புதச் சிற்பப் படைப்புகள் ஆகும்.

அர்த்த மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை
அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள்
சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும் திருமாலின் அவதாரங்களைக்
குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும், இதர சில சிற்பங்களும் உள்ளன.

கோவிலின் நுழைவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண்கள்
நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டுகின்றன.
இக்கற்றூண்கள் கோவிலை ஒரு இரதமாகக் காட்சியளிக்கச்
செய்கின்றன.

ஆஸ்தான மண்டபத்தில் பல தெய்வங்களின் கற்றூண்
சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது முருகன்
தெய்வயானைத் திருமணக் கோலம் ஆகும். இத்தூணிற்கு
எதிரிலுள்ள கற்றூணில் இராணி மங்கம்மாள், விஜயரங்க
சொக்கநாதர் ஆகியோரது உருவங்களைக்கொண்ட கற்றூண்
உள்ளது. ஆஸ்தான மண்டபத்தை அடுத்துள்ள இக்கோவிலின்
கோபுரம் 46 மீட்டர் உயரமுள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதி
சிற்ப வேலைப்பாடுமிக்கது. இதன் சிகரப் பகுதியில் காணப்படும்
சுதைச் சிற்பங்களும் அழகுமிக்கவை.

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில் சிற்பங்கள்
முன்னோர் நமக்கு வைத்துச் சென்றுள்ள தலைசிறந்த கோயிற்
கலைச்செல்வமாகும்.

சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வடக்கில் சுவாமி சந்நிதி
தெருவில் பழமையான சொக்கநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் விநாயகரின் பல அழகிய தோற்றங்களைக்கொண்ட