பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்247

அழகர் கோவில்

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அழகர்மலை
உள்ளது. இம்மலையின் தென்புற அடிவாரத்தில் அழகர்
கோவில் அமைந்துள்ளது. அழகர் என்ற பெயர்கொண்ட
திருமால். இங்குக் கோவில் கொண்டுள்ளார். இத்தலம்
சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம்

என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கள்ளர் என்ற சமூகத்தினர்
முக்கியமாக வழிபடும் தெய்வமாக இருப்பதால் கள்ளழகர் என்று
இக்கோவிலின் தெய்வம் அழைக்கப்படுகிறார். கருவறையில்
பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி
அழகர் அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார்.

அழகர் கோவில் பாண்டி நாட்டு வைணவத் தலங்களுள்
சிறப்புமிக்கது. இது தொன்மைமிக்கதாகும். பல ஆழ்வார்களின்
பாடல் பெற்ற தலமாகும்.

பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், பாணர்கள்,
மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை
இக்கோவில் கொண்டுள்ளது.

இக்கோவிலின் கருவறையில் மூலவர் ஸ்ரீ பரமசுவாமி
தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

கலைச்சிறப்பு

1. பெருமாளின் கருவறையின்மீது எழுப்பப்பட்டுள்ள
விமானம் சோமசந்த விமானம் எனப்படுகிறது. சந்திரனைப்
போன்று வட்ட வடிவமான அழகிய தோற்றத்தை இவ்விமானம்
கொண்டுள்ளது. கருவறைச் சுவர்கள் சிற்ப வேலைப்பாடு
மிக்கவை. இவற்றில் காணப்படும் சாளரங்கள் சிறந்த சிற்பப்
படைப்புகளாகும்.

2. ஆரியன் மண்டபத்திலுள்ள கொடுங்கைகள்
பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. இம்மண்டபத்தின்
இரண்டு மூலைகளிலும் இசைத் தூண்கள் உள்ளன. மேல்புறமுள்ள
இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில் கோழி