பக்கம் எண் :

248தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

முட்டை வடிவக் கல் உருண்டை கழலும் நிலையில் ஆனால்,
வெளியே எடுக்க முடியாதபடி அமைந்திருப்பது விந்தையாக
உள்ளது.

3. கோவிலின் உட்பிரகாரத்தில் உயரமான அதிட்டான
மேடைமீது மிகப்பெரிய கற்றூண்களை நிறுவியிருப்பது
அக்காலக் கட்டடக் கலைஞர்களின் பொறியியல் சாதனையாகும்.

4. கல்யாண சுந்தரவல்லித் தாயாரின் சந்நிதி சிற்பக்
கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

5. இக்கோவிலின் கல்யாண மண்டபம் ஒரு சிறந்த கலைக்கூடம்
ஆகும். நரசிம்ம அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன்,
ரதி, திருவிக்ரம அவதாரம், லஷ்மிவராகன்
ஆகிய பெயர்களைக்
கொண்ட கற்றூண்கள் கல்லில் கதை கூறுகின்றன. கல்யாண
மண்டபச் சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பிகளின் சிறந்த
படைப்புகளாகும்.

6. வசந்த மண்டபத்தில் இராமாயண, மகாபாரத
நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன.

7. கள்ளர் மரபினால் பெரிதும் வழிபடப்படும் கருப்பணசாமி
தெய்வம்
அழகர் கோவிலைக் காப்பதாகக் கூறப்படுகிறது.
பதினெட்டாம்படிக் கருப்பணசாமியின் சந்நிதியில் உள்ள
கோபுரம் சிற்ப வேலைப்பாடுமிக்கது.

8. இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு
முற்றுப்பெறா நிலையில் உள்ளது. அழிந்த நிலையிலும்,
இக்கோபுரத்தின் பகுதிகள் அக்காலச் சிற்பிகளின் உன்னத
உளி வேலைப்பாட்டினை எடுத்தியம்புகின்றன. இவற்றைக்
காப்பது நமது கடமையாகும்.

9. பழுதடைந்த நிலையிலுள்ள ‘திருமலை மன்னர்
மண்டபத்தில்’ திருமலை மன்னர், அவர் துணைவி, திருமலையின்
சகோதரர் முத்தியாலு அவர் துணைவி ஆகியோரின் அழகிய
ஆளுயரக் கற்றூண்கள் உள்ளன. இத்தூண்களைப் பாதுகாப்பது
நமது கடமையாகும்.