பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்249

‘வண்டிவாயிலருகில்’ கோவிலின் இரு தானியக்
களஞ்சியங்கள் உள்ளன. இவை இராமர் தானியக்
களஞ்சியம், ‘இலட்சுமணர் தானியக் களஞ்சியம்’
என
அழைக்கப்படுகின்றன.

கோவிலைச் சுற்றி உள்கோட்டை, வெளிக்கோட்டை
எனப்படும் முறையே ‘இரணியன் கோட்டையும்’, ‘அழகாபுரிக்
கோட்டை
யும்’ உள்ளன. எஞ்சியுள்ள கோட்டைப் பகுதிகள்
இன்னும் நல்ல நிலையில் உள்ளன.

புராண அடிப்படையில் ஸ்ரீ கள்ளழகர், மதுரை மீனாட்சி
சுந்தரேசுவரர் கோவிலின் இறைவி, ஸ்ரீமீனாட்சியின் சகோதரர்
ஆவார். சத்திரைத் திருவிழாவின்பொழுது, ஸ்ரீ கள்ளழகர்
அழகர் கோவிலிலிருந்து மதுரை நகருக்கு புறப்பட்டு மீனாட்சி
திருக்கல்யாண விழாவிற்கு வருகிறார். வைகையாற்றுவரை வந்து,
வண்டியூர் சென்று அழகர்மலை திரும்புகிறார். திருமலை மன்னர்
காலத்திற்கு முன் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்
விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று மதுரையை அடுத்துள்ள
தேனூரில் நடைபெற்றது. ஸ்ரீ கள்ளழகர் மதுரை வைகையாற்றில்
சித்திரை மாத முழு நிலவு நாளில் இறங்குமாறு செய்து
இவ்விழாவைச் சித்திரைத் திருவிழாவாகச் சிறப்புடன்
மதுரையில் கொண்டாடும்படி செய்தவர் திருமலை மன்னர் ஆவார்.

அழகர் கோவில் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள
சிறந்த மரபுரிமைச் செல்வமாகும்.

அழகர் கோவிலின் அடிவாரத்திலிருந்து 3 கி.மீ. உயரம்
மலைப்பாதையில் சென்றால் நூபுரகங்கை என்ற புனிதமாகக்
கருதப்படும் சிறிய நீரோட்டத்தைக் காணலாம்.

அழகர்மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில்
பழமுதிர் சோலை உள்ளது. இங்கு முருகன் கோவில் உள்ளது.
பழமுதிர்சோலை முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும்.
சோலைமலையில் ஸ்ரீகள்ளழகரின் வழிபாடு ஏற்படும் முன்னரே,
முருகனின் வழிபாடு தோன்றியது என்பர்.