மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி
உயரமான
அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான
கற்கோவிலாகும், இதன் கொடுங்கைகளும், இதர சிற்ப
வேலைப்பாடுகளும் சிறப்புமிக்கவை. தாயார் மோகனவல்லி
எனப்படுகிறார். இக்கோவிலின் கம்பத்தடி மண்டபம் ஒரு சிற்பக்
கருவூலமாக உள்ளது. இம்மண்டபத்திலுள்ள இராமர்,
சீதை,
லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின்
உருவங்களைக்கொண்ட ஒற்றைக் கல்லினாலான
சிற்பங்கள்
சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத்
தாங்கிய தூண்கள் அரிய வேலைப்பாட்டினைக்
கொண்டுள்ளன.
இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது
சகோதரர்களின் ஆளுயரக் கற்றூண் உருவங்கள்
அழகுடன்
காட்சியளிக்கின்றன.
திருவாதவூர்
மதுரையிலிருந்து 24 கி.மீ. (திருமோகூரிலிருந்து 12 கி.மீ.)
தொலைவில் திருவாதவூர் உள்ளது. சைவ சமயச்சாரியார்
நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த இடம் திருவாதவூர்
ஆகும். திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர் இறைவனது
அருள் பெறுவதற்கு முன் திருவாதவூரர் என அழைக்கப்பட்டார்.
(மாணிக்கவாசகரைப்பற்றிய சில குறிப்புகள் இப்புத்தகத்தின்
‘ஆவுடையார் கோவில்’ என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளன.)
மதுரைப் பாண்டிய மன்னன்
இரண்டாம் வரகுணனிடம்
(கி.பி. 862-885) திருவாதவூரர் அமைச்சராகப் பணியாற்றினார்.
மாணிக்கவாசகர் வாழ்க்கையில் நடந்தனவாகக்
கூறப்படும்
சிவபெருமானது திருவிளையாடல்கள் சில (நரிகளைப்
பரிகளாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது) உள்ளன. மதுரையில்
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் நடைபெறும் பிட்டுத்
திருவிழா அல்லது ஆவணி மூலத் திருவிழா சிவபெருமானின்
மேற்கூறிய திருவிளையாடல்களை மையமாகக் கொண்டதாகும்.
மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்களின் தொகுதி
திருவாசகம்
ஆகும். மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் இறைவனடி சேர்ந்தார்.
|