பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்267

இக்கோவிலின் அம்மன் பிரகதாம்பாள் எனப்படுகிறார்.
தொண்டைமான்களுக்கு, இக்கோவிலில் முடிசூட்டுவது மரபாக
இருந்தது. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர்
கி.பி. 1518-19இல் இக்கோவிலுக்கு வருகை தந்தார் எனப்படுகிறது.

இறைவனின் கருவறையை அடுத்துள்ள மலையின்
அடிப்பகுதியில் சப்தகன்னி மாதர்கள், விநாயகர்,
வீரபத்திரர்
ஆகியோரது திருவுருவங்கள் புடைப்புச்
சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன.

நுழைவாயிலை அடுத்துள்ள மண்டபத்தில் புதுக்கோட்டை
சமஸ்தான மன்னர்களைப்பற்றிய சித்திரங்களும் தலப்
பெருமைகளும் வரையப்பட்டுள்ளன. மேல் விட்டத்தில்
இராமாயணச் சித்திரங்கள்
தீட்டப்பட்டுள்ளன. கல்யாண
மண்டபத்தில்
அழகிய சிற்பங்கள் உள்ளன. ஒரே கல்லினாலான
தூண்களில் செதுக்கப்பட்ட இச்சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை.
இராமர், ஊர்த்துவ தாண்டவம், கைகேயியைத் தூக்கிய
நிலையில் தசரதர், வீரபத்திரர், ரதி-மன்மதன், கர்ணன்,
காளி, குதிரைவீரன் சிற்பம்
ஆகியவை நேர்த்தியான கலைப்
படைப்புகளாகும். இவற்றுள் சில சிற்பங்கள் சேதமுற்ற நிலையில்
உள்ளன. அம்மன் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் காணப்படும்
காளி ஊர்த்துவ தாண்டவர்
ஆகிய சிற்பங்களும் சிறந்தவை.
பகுளவனேஸ்வரர் சந்நிதியும், மங்கள நாயகி சந்நிதியும்
இக்கோவிலில் உள்ளன. இக்கோவிலின் சுக்கிரவார
மண்டபத்திலுள்ள சதாசிவ பிரம்மேந்திரர் என்ற ஞானி
புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தாரின் குருவாகப்
போற்றப்பட்டார். மூலத்தானத்தைக் கடந்து சென்றால்
கோவிலின் மேல்மாடியில் பல தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன.

திருக்கோகர்ணக் கோவில், மலைமீது அமைந்துள்ள ஓர்
அழகிய கலைக்கோவிலாகும். புதுக்கோட்டை நகரில் சாந்த நாத
சுவாமி
கோவில், அரிய நாச்சியம்மன் கோவில் ஆகிய
கோவில்கள் அமைந்துள்ளன.