பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்269

குகையின் உட்புறத்தில் கூரைப்பகுதியிலுள்ள தாமரைக்
குள ஓவியங்கள்,
முன் மண்டபத்திலுள்ள நடனமாடும் நிலையில்
உள்ள இரு பெண்களின் ஓவியங்கள், ஓர் அரசன், அரசியின்
தலைப்பகுதி ஓவியங்கள்
ஆகியவை சித்தன்னவாசல் குகையில்
காணப்படும் வனப்புமிக்க ஓவியங்களாகும். இங்கு ஓவியமாக
வரையப்பட்டுள்ள அரசன் ஸ்ரீவல்லப பாண்டியனாக இருக்கலாம்
என்று கருதப்படுகிறது. நடன நிலையிலுள்ள பெண்கள் அப்சரஸ்
என்னும் பூவுலகத்தாசிகள் என்று கருதப்படுகின்றனர்.

சித்தன்னவாசல் ஓவியங்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்டவையாயினும் இன்றும் வண்ணம் குறையாது பொலிவுடன்
விளங்குகின்றன. கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட இவ்
ஓவியங்கள் பாண்டியர்கால ஓவியக் கலைத்திறனைக்
காட்டுகின்றன. இவ்வோவியங்கள், பாண்டியர் காலத்துப் பெண்டிர்
அணிந்த அணிகலன்களையும், ஆடலணங்குகள் அணிந்த
அணிகலன்களையும், அவர்தம் கூந்தல் அலங்காரத்தையும்,
அணி செய்யப்பட்ட மெல்லிய மேலாடையையும், இன்னும்
பல அம்சங்களையும் நமக்குத் தெரிவிக்கின்றன.

“சித்தன்ன வாசல் குகைக் கோயில் ஓவியம், சிற்பம்,
நடனம்
என முக்கலைகளையும் சிறப்பிக்கும் கலைக்கூடமாக
விளங்குகிறது.”

குடுமியான் மலை

புதுக்கோட்டை நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் குடுமியான்
மலை உள்ளது. இம்மலையின் அடிவாரத்தில் குடுமிநாதர் கோவில்
உள்ளது. இது சிகாகிரீஸ்வரர் கோவில் எனவும் அழைக்கப்படும்.
இக்கோவில் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 10ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று
கருதப்படுகிறது. அர்த்த மண்டபமும், மா மண்டபமும் தஞ்சைச்
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவையாகும்.
பல்லவராயர்
திருப்பணிகள் சில இக்கோவிலில் உள்ளன.
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
காலத்தில்
(1216-1238) இக்கோவிலின் இரண்டாம்